ஒகேனக்கல்லில் நீர்வரத்து 45 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்கவும் பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கர்நாடக மாநிலத்தின் காவிரி கரையோர பகுதிகள் மற்றும் தமிழக எல்லையான தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்ட காவிரி கரையோர பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாகவும் மற்றும் கர்நாடக அணைகளான கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணையில் இருந்து நீர் வெளியேற்றத்தின் அளவு 21,800 கனஅடியாக உள்ளது.
கே.ஆர்.எஸ் அணையில் இருந்து வெளியேற்றும் நீரின் அளவு :18,000 கன அடியாகவும் மற்றும் கபினி அணை நீர் வெளியேற்றம் 3,800 கன அடியாகவும் உள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து இன்று 45 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி நீர்வரத்து 40ஆயிரம் கன அடியாகவும் மாலை 43ஆயிரம் கன அடியாகவும் தொடர்ந்து அதிகரித்து இன்று காலை 6 மணி நிலவரப்படி 43 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து 8 மணி நிலவரப்படி மேலும் அதிகரித்து 45,000 கன அடியாக உள்ளது.
இதன்காரணமாக ஒகேனக்கல் மெயின் அருவி, சிற்றருவி மற்றும் ஆற்றங்கரை ஓரங்களில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும் பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மெயின் அருவிக்கு செல்லும் பகுதியில் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சுற்றுலாப்பயணிகள் உள்ளே நுழையாதபடி தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நீர்வரத்து அதிகரிப்பால் ஐவர் பவனி பகுதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. தமிழக-கர்நாடக எல்லை பகுதிகளில் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தியாளர்: ஆர்.சுகுமாா் (தருமபுரி)
Published by:Ramprasath H
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.