முகப்பு /செய்தி /தமிழ்நாடு / நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டு ஓடிச்சென்று வாக்களித்த ஓட்டுனர்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டு ஓடிச்சென்று வாக்களித்த ஓட்டுனர்

பயணிகளிடம் அனுமதி பெற்று விட்டு, ஓடோடிச் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் தனியார் பேருந்து ஓட்டுனர் கிருஷ்ணன்

பயணிகளிடம் அனுமதி பெற்று விட்டு, ஓடோடிச் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் தனியார் பேருந்து ஓட்டுனர் கிருஷ்ணன்

பயணிகளிடம் அனுமதி பெற்று விட்டு, ஓடோடிச் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் தனியார் பேருந்து ஓட்டுனர் கிருஷ்ணன்

  • Last Updated :

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி ஓட்டுனர் ஒருவர் பேருந்தை ஓரமாக நிறுத்தி விட்டு வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்த சம்பவம் பொதுமக்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில், 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் இருக்கின்றன. இவற்றில் மொத்தமாக 12,838 வார்டுகள் உள்ளன.

இந்த வார்டுகளுக்கான தேர்தல் நாளை மறுநாள் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் மொத்தம் 74,416 வேட்புமனுக்கள் பெறப்பட்டன. வேட்புமனு பரிசீலனையின் போது 2,062 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இதையும் படிங்க - உள்ளாட்சி தேர்தலுக்கு அரை நிர்வாணமாக வாக்களிக்க வந்த நபரால் பரபரப்பு

14,324 வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை திரும்ப பெற்றனர். 218 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவானது இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

இதையும் படிங்க - இப்பவே போய் ஓட்டு போடுங்க.. 5 மணிக்கு மேல சென்றால் அனுமதி கிடையாது

இந்நிலையில் தர்மபுரியில் ஓட்டுனர் ஒருவர் பேருந்தை ஓரமாக நிறுத்தி விட்டு வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்துள்ளார். பொம்மிடியில் உள்ள வாக்குச்சாவடி அருகே தனியார் பேருந்து ஓட்டுனர் கிருஷ்ணன் என்பவர், பேருந்தை நிறுத்தியுள்ளார்.

பின்னர் உள்ளே இருந்த பயணிகளிடம் அனுமதி பெற்று விட்டு, ஓடோடிச் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார். பின்னர் மீண்டும் வந்து பேருந்தை இயக்கி சேலத்திற்கு சென்றுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பொதுமக்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

First published:

Tags: Local Body Election 2022