தருமபுரியில் தொடரும் மின்வெட்டு ... கல்வி பயிலும் மாணவர்கள் பெரும் பாதிப்பு
தருமபுரியில் தொடரும் மின்வெட்டு ... கல்வி பயிலும் மாணவர்கள் பெரும் பாதிப்பு
கல்வி பயிலும் மாணவர்கள் பெரும் பாதிப்பு
TN PowerCut | தற்போது 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நெருங்கி உள்ள நிலையில் இதுபோன்ற மின்வெட்டால் பள்ளி மாணவர்கள் படிக்க முடியாமல் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தருமபுரியில் இரவு நேரங்களில் தினமும் தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுவதால் பள்ளி மாணவர்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகின்றனர்.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட மோளையானூர், வெங்கடசமுத்திரம், பூனையானூர், மெனசி உள்ளிட்ட கிராமங்களில் தொடர்ந்து ஒரு வாரமாக அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
நேற்று மின் வெட்டு ஏற்பட்டதால் பொதுமக்கள் வீடுகளில் இருக்க முடியாமல் தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். குறிப்பாக இரவு நேரத்தில் மட்டும் நான்கு முறை மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் பல மணிநேரம் பொதுமக்கள் தூக்கமின்றி தவித்தனர்.
இருட்டில் கல்வி கற்கும் மாணவர்கள்
இரவு நேரங்களில் தினமும் தொடர்ந்து 1 மணிநேரத்திற்கு ஒரு முறை மின் இணைப்பு துண்டிக்கப்படுவதால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருவதாகவும், குறிப்பாக தற்போது 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நெருங்கி உள்ள நிலையில் இதுபோன்ற மின்வெட்டால் பள்ளி மாணவர்கள் படிக்க முடியாமல் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மின்சார அலுவலகத்திற்கு போன் செய்தால் யாரும் சரியான பதில் கூறுவதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தேர்வு முடியும் வரையாவது மின்சாரத்தை துண்டிக்காமல் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
செய்தியாளர் : ஆர்.சுகுமாா்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.