தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி) சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிமுக கூட்டணியை சார்ந்தவர்கள் தொடர்ந்து முன்னிலை பெற்று வந்தனர்.
அதன்படி, பாலக்கோடு தொகுதியில் ஐந்தாவது முறையாக கே.பி அன்பழகன் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதியில் பாமக தலைவர் ஜி.கே.மணி மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.
பாப்பிரெட்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுகவைச் சேர்ந்த கோவிந்தசாமி இரண்டாவது முறையாகவும், அரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுகவைச் சேர்ந்த சம்பத்குமார் இரண்டாவது முறையாகவும் வெற்றி பெற்றுள்ளனர்.
தருமபுரி சட்டப்பேரவைத் தொகுதியில் பாமக சார்பில் போட்டியிட்ட எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தான் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்றுள்ளார்.
60. பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதியில், மொத்தமாக பதிவான வாக்குகள் (217752)
1.கோவிந்தசாமி (அதிமுக) 114507
2.பிரபுராஜசேகா் (திமுக) 75831
3. பழனியப்பன் (அமமுக)15595
4.ரமேஷ் (நாதக) 7573
5. நோட்டா 1338
வித்யாசம் 38676 வாக்குகள்
61. அரூா் சட்டமன்ற தொகுதியில் மொத்தமாக பதிவான வாக்குகள் (196005)
1.சம்பத்குமார் (அதிமுக) 990612.
2. குமார் (மா.கம்யூ) 686993.
3. ஆா்.ஆா்.முருகன் (அமமுக) 143274.
4. கீா்த்தனா (நாதக) 109505.
5. நோட்டா 2249
வித்யாசம் 30362 வாக்குகள்
58. பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் மொத்தமாக பதிவான வாக்குகள் (209546)
1.ஜி.கே.மணி (பாமக) 106123
2.இன்பசேகரன் (திமுக) 83765
3.தமிழழகன் (நாதக) 8945
4.உதயகுமார் (தேமுதிக ) 2921
5.பெரியநஞ்சப்பன் (சுயேட்சை) 1968
வித்யாசம் 22358 வாக்குகள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: AIADMK Alliance, Dharmapuri, Election Result, TN Assembly Election 2021