தருமபுரி மாவட்டம் கடத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து தர்மபுரி செல்லும் சாலையின் வலதுபுறத்தில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் அய்யனார் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி கடத்தூர் பேரூராட்சி பகுதிக்கு நிலத்தடி நீர் கிடைக்கும் ஆதாரமாக இருந்து வருகிறது. கடத்தூர்பேரூராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வரும் இந்த ஏரியில் வருடம்தோறும் மீன் பிடிப்பதற்கு ஏலம் விடப்பட்டு அதன் மூலம் அரசுக்கு வருவாய் கிடைத்து வருகிறது.
இந்த வருடம் கொரோனா ஊரடங்கு என்பதால் ஏரியை ஏலம் விடாத நிலையில் ஊர் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மீன்களை தூண்டில் மூலமாகவும் வலைகள் மூலமாகவும் பிடித்து விற்பனை செய்தும், உணவாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த ஏரியில் மீன் பிடிப்பதில் தூண்டில் மூலம் மீன் படிப்பவர்களுக்கும் வலை விரித்து மீன் பிடிப்பவர்களுக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இரு பிரிவினருக்கும் இடையே மீன் பிடிப்பதில் ஏற்பட்ட மோதலால் ஒரு பிரிவினர் ஏரியில் ரசாயனம் அல்லது விஷம் கலந்து இருக்கலாம் என புகார் எழுந்துள்ளது.இதனால் ஏரியில் தண்ணீர் நிறம் மாறி இயற்கையாகவே ஏரியில் வளர்ந்த சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மீன்கள் பாதிப்படைந்து மீன்கள் செத்து மிதந்து வருவதாக இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
மேலும் படிக்க... திண்டுக்கல்:காய்கறி மார்க்கெட்டில் ஊரடங்கு விதிகளை மீறி குவிந்த மக்கள்
இதுகுறித்து கடத்தூர் பேரூராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் புகார் தெரிவித்தும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளாமல் மெத்தனப் போக்கை நடந்து கொள்வதாகவும் இப்பகுதி பொதுமக்களும் மீன் பிடிப்பவர்களும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர். பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு தருமபுரி மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளார்: ஆர்.சுகுமாா், தருமபுரி
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dharmapuri, Fish