தொப்பூரில் அடுத்தடுத்து 3 லாரிகள் மோதி விபத்து - நள்ளிரவில் நடந்த பயங்கரம்

தொப்பூர் சாலை விபத்து

சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் அருகே 3 லாரிகள் மோதிக்கொண்டு விபத்து.

  • Share this:
    தொப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து லாரிகள் மோதல் திருச்சி மற்றும் எடப்பாடியை சேர்ந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. விபத்து நடந்த இடத்தை சேலம் சரக டி.ஐ.ஜி, எஸ்.பி விபத்து பகுதியில் பார்வையிட்டனர்.

    தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே நின்றிருந்த லாரி மீது அடுத்தடுத்து 3 லாரிகள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். 14 பேர் காயமடைந்தனர். தருமபுரியில் இருந்து கழிவுநீர் சுத்திகரிப்பு  செய்யும் வாகனம் நேற்று நள்ளிரவில் இரவு சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த வாகனம் தருமபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் அடுத்த புதூர் அருகே சென்றுக்கொண்டிருந்தபோது திடீரென பழுது ஏற்பட்டது.

    வாகனத்தை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு வாகனத்தில் பழுது நீக்கும் பணியில் திருச்சி மற்றும் விருதுநகர் பகுதியைச் சேர்ந்த 12 பேர் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கிருஷ்ணகிரியில் இருந்து கருங்கற்கள் பாரம் ஏற்றி சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நின்றிருந்த கழிவுநீர் சுத்திகரிப்பு வாகனத்தின் மீது திடீர் என மோதி விபத்துக்குள்ளானது.

    Also Read:  குளிர்பானத்தில் மயக்க மருந்து.. இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை.. வீடியோ எடுத்து மிரட்டிய போலீஸ் கான்ஸ்டபிள்

    அப்போது கற்கள் பாரம் ஏற்றி வந்த லாரியின் பின்னால் குஜராத்தில் இருந்து அவினாசி க்கு உருளைக்கிழங்கு ஏற்றி வந்த லாரி மற்றும் அதனையடுத்து வந்த மற்றொரு சரக்கு வாகனம் என அடுத்து மோதி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா எடமலைபுதூரை சேர்ந்த  ரத்தினவேல் , மற்றும் சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த எட்டிமாங்குறிச்சியை சேர்ந்த சித்தையன்  ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    மேலும், விருதுநகரைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (32), மாரியப்பன் (28),  திருச்சியைச் சேர்ந்த பாண்டியன்(30), பகவதி ராஜ்(34), மதன்குமார்(25) மற்றும் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த அனுமந்தன்(43), ராமகிருஷ்ணன் (37), ரமேஷ் (43) உள்பட 14 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தொப்பூர் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் மற்றும் பாளையம் சுங்கச்சாவடி பணியாளர்கள் விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    Also Read:  ப.சிதம்பரத்திடம் வாக்குவாதம் செய்த காங்கிரஸ் நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்

    இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இவ்விபத்து குறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.கலைச்செல்வன் நிகழ்விடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார். இவ்விபத்து தொடர்பாக தருமபுரி- சேலம் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சேலம் டி.ஐ.ஜி மகேஸ்வரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் ஆகியோர் சம்பவ இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும்  விபத்துக்குள்ளான ஒரு வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து உள்ளதால் அதை மீட்கும் பணிகள் நடந்தது வருகிறது.

    செய்தியாளர்கள்: ஆர்.சுகுமாா் (தருமபுரி) 

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Ramprasath H
    First published: