அரசு மதுபானக் கடைகளில் சமூக இடைவெளியின்றி மூட்டை மூட்டையாக மதுபாட்டில்களை மதுப்பிரியர்கள் வாங்கிச் செல்கின்றனர். இதனை கண்டும் காணாமல் இருக்கும் காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே துறிஞ்சிபட்டி கிராமத்தில் உள்ள அரசு மதுக்கடைகளில் சேலம் மாவட்ட மதுப்பிரியர்கள் பைகளுடன் சமூக இடைவெளி இன்றி நீண்ட வரிசையில் காலை 7 மணியில் இருந்து காத்திருந்து மது வாங்கி செல்வதால் அங்கு கொரோனா பரவல் ஆபத்து நேரும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மூட்டை மூட்டையாக மது பாட்டில்களை தூக்கி செல்லும் மது பிரியர்களை காவல்துறையினர் கண்டும் காணாமல் இருப்பதால் பொதுமக்கள் காவல் துறையினர் மீது அதிருப்தியில் உள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தருமபுரி மாவட்டத்தில், ஊரடங்கு தளர்வுகளால் மாவட்டத்திலுள்ள 68 அரசு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. மாவட்டத்தில் மற்ற பகுதிகளில் உள்ள மதுபானக்கடைகள் வெறிச்சோடி காணப்படும் நிலையில், சேலம் மாவட்டத்தில் மதுக்கடைகள் திறக்கப்படாததால் தருமபுரி சேலம் மாவட்ட எல்லப் பகுதியில் உள்ள பொம்மிடி அருகே துறிஞ்சிபட்டி நாலு ரோடு பகுதியில் உள்ள இரண்டு அரசு மதுபானக் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. இந்த கடைக்கு சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஏற்காடு, சேர்வராயன் மலை மற்றும் ஓமலூர், தீவட்டிப்பட்டி மற்றும் சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மதுப்பிரியர்கள் அதிக அளவில் வருகின்றனர்.
இருசக்கர வாகனங்கள், மூலம் மது வாங்க ஏற்காடு மலையில் இருந்து ஆணைமடுவு வழியாக சாக்கு பைகள், டிராவல் பேக், கட்டை கைப்பிடி பைகளுடன் தினம் தினம் நீண்ட வரிசையில் சமூக இடைவெளி இன்று குவிந்து வருகின்றனர்.
Also read: குடிபோதையில் மகளிடம் அத்துமீற முயன்ற தந்தை - அம்மிக்கல்லை போட்டு கொன்ற மகள்
மேலும் சேலம் மாவட்டத்தில் தளர்வுகள் இல்லாத நிலையில் சமூக இடைவெளியின்றி மதுக்கடைகளில் குவிந்து வருவதால் தருமபுரி மாவட்டத்தில் குறைந்துவரும் கொரோனா தொற்று மேலும் அதிகம் பரவ வாய்ப்புள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.
மேலும் நீண்ட வரிசையில் சமூக இடைவெளியின்றி காத்திருக்கும் மது பிரியர்களை காவல்துறையினர் நின்று கொண்டு வேடிக்கை பார்ப்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு நபருக்கு குவாட்டர் பத்து பாட்டில்களும், 4 ஆப் பாட்டில்களும், 2 ஃபுல் பாட்டில்களும் வழங்க அனுமதி அளித்துள்ளதாக தர்மபுரி டாஸ்மாக் மேலாளர் கேசவன் அறிக்கையில் தெரிவித்துள்ள நிலையில், துறிஞ்சிபட்டி இரண்டு டாஸ்மாக் கடைகளிலும் குவாட்டருக்கு பத்து ரூபாய் வீதம் வைத்து ஒரு நபர் கேட்கும் அளவிற்கு மூட்டை மூட்டையாக மது பாட்டில்களை விலைக்கு கொடுத்து வருகின்றனர். இதனால் சேலம் மாவட்ட பகுதிகளில் இருந்து மற்ற மாவட்டங்களில் இருந்தும் துறிஞ்சிபட்டி மதுக்கடைக்கு வந்து மதுபானத்தை வாங்கிச் சென்று, வெளியில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் கடுமையான முயற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில், தருமபுரி மாவட்ட எல்லைப் பகுதிகளில் உள்ள அரசு மதுபானக் கடைகளில் கொரோனா வைரஸ் தொற்றை பரப்பிவரும் மதுக்கடை ஊழியர்கள் மீதும், அதை வேடிக்கை பார்த்து நிற்கும் காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் - ஆர்.சுகுமாா்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dharmapuri, Salem, Tasmac