Home /News /tamil-nadu /

மயானத்தில் 3 குழந்தைகளோடு வசித்து வரும் இளம்பெண்... கணவர் இறந்ததால் வறுமையில் சிக்கித் தவிப்பு..!!

மயானத்தில் 3 குழந்தைகளோடு வசித்து வரும் இளம்பெண்... கணவர் இறந்ததால் வறுமையில் சிக்கித் தவிப்பு..!!

 3 குழந்தைகளோடு வறுமையில் வாடும் பெண்

3 குழந்தைகளோடு வறுமையில் வாடும் பெண்

Dharmapuri District | இதுவரை மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும் எவ்வித உதவியும் எனக்கு கிடைக்கவில்லை. ஆகவே, வாழ வழியின்றி சாப்பாட்டுக்கு வழியில்லாமல் சுடுகாட்டில் வாழும் எங்களுக்கு வீடும், உதவிகள் வழங்கிட தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
    பாப்பிரெட்டிப்பட்டியில் கணவனை இழந்து வாழ வழியின்றி 3 பெண் குழந்தைகளுடன் மயானத்தில் வாழும் பெண் ஒருவர் தமிழ்நாடு அரசு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் ரபீக், (வயது 30 ).  இவரது மனைவி ரஜ்ஜியா, (வயது 28). இவர்களுக்கு ஹப்சரி, (வயது 10) ரிவானா (வயது 8 ) , பர்ஜானா (வயது 6) ஆகிய 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் கொரோனோ பொது முடக்கத்தில் திருப்பூருக்கு கூலி வேலைக்கு சென்றனர். அங்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு சொந்த ஊருக்கு திரும்பி வந்த ரபிக்  நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். பின்பு ரஜ்ஜியா தனது, மூன்று பெண் குழந்தைகளுடன் பாப்பிரெட்டிப்பட்டியில் தனது தந்தை இம்ரான் வசிக்கும் இஸ்லாமியர் மயானத்துக்கு வந்து விட்டார்.

    தற்பொழுது மூன்று குழந்தைகளும் அரசு தொடக்கப் பள்ளியில் படித்து வருகின்றனர்.  இது குறித்து ரஜ்ஜியா தெரிவிக்கையில், நான் இரண்டாம் வகுப்பு வரை படித்துள்ளேன். எனது கணவர் இறந்த பிறகு தாயார் மற்றும் தந்தையுடன் வசித்து வருகின்றேன். அவர்கள் கூலி வேலை செய்து வருகின்றனர். சாப்பாட்டிற்கு கஷ்டப்படுகின்றனர். எனது தந்தை யாராவது இறந்தால் இஸ்லாமியர் மயானத்தில் இறப்பிற்கு குழி வெட்டுவார். அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து தாய் , தம்பி , அக்கா, அவர்களின் குடும்பத்தார் 9 பேர் நாங்கள் 4 பேர் சேர்ந்து மொத்தம், 13 பேர் வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

    ALSO READ |  Crime | சாராய கடத்தலில் வெடித்த மோதல்.. 5 பேருக்கு அரிவாள் வெட்டு.. வீட்டுக்கு தீவைப்பு - நாகையில் பதற்றம்
     இது குறித்து இதுவரை மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும் எவ்வித உதவியும் எனக்கு கிடைக்கவில்லை. ஆகவே, வாழ வழியின்றி சாப்பாட்டுக்கு வழியில்லாமல் சுடுகாட்டில் வாழும் எங்களுக்கு வீடும், உதவிகள் வழங்கிட தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும் என கூறியுள்ளார்.


    செய்தியாளர் : ஆர்.சுகுமாா்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Dharmapuri

    அடுத்த செய்தி