மாமியாரின் தகாத உறவு.. ஒன்பது மாத கர்ப்பிணி மர்ம மரணம் - அதிர்ச்சியில் உறவினர்கள்
மாமியாரின் தகாத உறவு.. ஒன்பது மாத கர்ப்பிணி மர்ம மரணம் - அதிர்ச்சியில் உறவினர்கள்
சோனியா
Dharmapuri District: சோனியாவின் மரணத்திற்கு தங்கவேலு, பொன்னம்மாள், ரஜினி, பவானி, ஜெயக்குமார் என்கின்ற பிரதீப் என 5 நபர்கள் தான் காரணம் என்று உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
அரூர் அருகே இன்று வளைகாப்பு நடைபெற உள்ள நிலையில் ஒன்பது மாத நிறைமாத கர்ப்பிணி மர்மமான முறையில் தூக்கிட்டபடி உயிரிழந்துள்ளார்.
தருமபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள அச்சல்வாடி அடுத்த ஒடசல்பட்டி கிராமத்தைச் சார்ந்த ஜெயகுமார் (எ)பிரதீப் என்பவருடைய மனைவி சோனியா, (20) கடந்த 11 மாதத்திற்கு முன்பு இருவரும் திருமணம் செய்துக்கொண்ட நிலையில் பிரதீப் கோவையில் கூலி வேலை செய்துவருகிறார். மனைவி சோனியா, 9 மாத நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். சோனியாவின் மாமியார் பொன்னம்மாவுக்கும் சோனியாவின் அத்தையின் கணவர் பவானி ஆகிய இருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.
இதைக்கண்ட சோனியா அவருடைய அத்தை முத்தழகியிடம் தெரிவித்துள்ளார். இதனை அறிந்த பவானியும் பொன்னம்மாவும் சோனியாவை பழிவாங்கும் எண்ணத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இன்று சோனியாவிற்கு வளைகாப்பு நடைபெற உள்ள நிலையில் நேற்று இரவு மர்மமான முறையில் இவருடைய வீட்டில் தூக்கிலிட்டபடி இறந்து கிடந்துள்ளார். இதனைத் தொடர்ந்து சந்தேகம் அடைந்த உறவினர்கள் அரூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு அரூர் அரசு மருத்துவமனைக்கு உடலை பிரேத பரிசோதனைக்காக கொண்டுவந்தனர். இந்த இறப்பில் மர்மம் உள்ளதாக சோனியாவின் தந்தை சிங்காரம் கொடுத்த புகாரின் பேரில் கொலையா தற்கொலையா என அரூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சோனியாவின் கணவர் மற்றும் அவர் குடும்பத்தைச் சார்ந்த யாரும் மருத்துவமனைக்கு வராதது இன்னும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இன்று வளைகாப்பு நடைபெற உள்ள ஒன்பது மாத நிறைமாத கர்ப்பிணி பெண் மர்மமான முறையில் தூக்கிட்டபடி உயிரிழந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி உறவினர்களிடம் கேட்கும்போது சோனியாவின் மரணத்திற்கு தங்கவேலு, பொன்னம்மாள், ரஜினி, பவானி, ஜெயக்குமார் என்கின்ற பிரதீப் என 5 நபர்கள் தான் காரணம் என்று குற்றம் சாட்டுகின்றனர்.
செய்தியாளர் : ஆர்.சுகுமாா் (தருமபுரி)
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.