Home /News /tamil-nadu /

திருமணமான பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. இளைஞரை அடித்துக்கொன்ற சகோதரர் - தருமபுரியில் பரபரப்பு

திருமணமான பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. இளைஞரை அடித்துக்கொன்ற சகோதரர் - தருமபுரியில் பரபரப்பு

இளைஞர் அடித்துக் கொலை

இளைஞர் அடித்துக் கொலை

Dharmapuri : திருமணமான பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த பாலஜங்கமணஹள்ளியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவியை அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் நேற்று மாலை பாலியல் தொந்தரவு  செய்துள்ளார்.  இதனையடுத்து அந்தப் பெண் கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து ராஜேஷை தாக்கியுள்ளனர்.

    அப்போது ராஜேஷ் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. இது குறித்து, அந்த பெண்ணின் சகோதரர் சென்னன் அதியமான் கோட்டை காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
    பாதிக்கப்பட்ட பெண்னை தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று மாலை சேர்ந்துள்ளார்.

    அப்போது ராஜேஷும் இரவு 10மணியளவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்வதற்கு  வந்தார். அப்போது பெண்ணின் சகோதரர்  சென்னன் (23) மருத்துவமனைக்கு வந்த ராஜேசை பார்த்ததும் ஆத்திரத்தில் இரும்பு ராடால் தலையில்  சரமாரியாக தாக்கியதில் சம்பவ இடத்திலேயே ராஜேஷ் ரத்தவெள்ளத்தில்  உயிரிழந்தார்.

    மருத்துவமனை வளாகத்தில் இருந்த பொதுமக்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் கொலை சம்பவத்தின்போது பார்த்த உடன் அந்த இடத்திலிருந்து அலரியடித்து ஓடினர். இந்நிலையில், ரத்த வெள்ளத்தில் இருந்த ராஜேசை மருத்துவமனை ஊழியர்கள் மருத்துவமனைக்குச் தூக்கி சென்று சோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்பது உறுதி செய்யப்பட்டது.

    கொலை செய்த இடத்திலேயே சென்னன் இருந்ததால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக கொலை குறித்த தருமபுரி நகர காவல் துறைக்கு தகவல் அளித்ததன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொலையாளி சென்னனை  கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

    Must Read : இனப்படுகொலைக்கு நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது- இலங்கை விவகாரம் குறித்து விஜயகாந்த் கருத்து

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் காவல் துணை கண்காணிப்பாளர் வினோத்  மற்றும் கைரேகை நிபுணர்கள் நேரில் பார்வையிட்டு  விசாரணை மேற்கொண்டனர்.

    செய்தியாளர் - ஆர்.சுகுமாா், தருமபுரி
    Published by:Suresh V
    First published:

    Tags: Crime News, Dharmapuri, Murder, Police, Sexual harrasment, Tamil News

    அடுத்த செய்தி