தமிழ்நாட்டின் ஆளுநர் பாஜகவின் ஏஜென்டாக செயல்படுவதாக தி.க தலைவர் வீரமணி கடுமையாக விமர்சித்துள்ளார். தி.க சார்பில் நீட் தேர்வு எதிர்ப்பு , புதிய கல்வி கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு பரப்புரை பயண பொது கூட்டம் தருமபுரியில் மாவட்ட தலைவர் பரமசிவம் தலைமையில் நடைபெற்றது.
இதில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி சிறப்புரை ஆற்றினார். அப்போது இந்தியா முழுவதும் கொரோனா என்ற வைரஸ் தொற்று பல ரூபத்தில் வந்து மக்களை வாட்டி வதைத்தது. அதை விட மிக மோசமான கொடிய நோய் தான் நீட் தேர்வு மற்றும் தேசிய கல்வி கொள்கை என்ற குலதர்ம கல்வி திட்டம் என்றார். கொரோனா காலத்தில் உறவினர்கள் கூட நோயாளிகளை நெருங்க முடியாமல் யோசித்த நிலையில் நோயால் பாதிக்கபட்ட பொதுமக்களை எந்த முதல்வரும் செய்யாத ஒன்றை மருத்துவமனையில் நேரில் சென்று பார்த்த ஒரே தமிழக முதல்வர் ஸ்டாலின் தான்.
அதேபோல் கொடிய நோயான நீட் மற்றும் தேசிய கல்வி கொள்கையையும் துணிந்து எதிர்த்து போராடுவார். மேலும் அவர் கூறுகையில் சமஸ்கிருதம் படித்தவர்கள் மட்டுமே மருத்துவர் ஆக முடியும் என்ற நிலையை 100 ஆண்டுகளுக்கு முன்னறே ஒழித்து கட்டிய பெருமை திராவிட இயக்கத்தை சாரும் என்றார். அதனடிப்படையில் தமிழகத்தில் மாவட்டம் தோறும் அனைவரும் படிக்கும் வகையில் மருத்துவ கல்லூரிகள் துவக்கிய பெருமை திராவிட மாடல் ஆட்சியை சாரும் என்றார்.
இதையும் படியுங்கள் : PM Modi | பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்திக்கிறார் பிரட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
திராவிட மாடல் ஆட்சி என்றால் என்ன என கேட்பவர்களுக்கு அனைவரும் படிக்க வேண்டும் என்பது தான் திராவிட மாடல் ஆட்சி ஆகும். குஜராத் முதல்வராக இருந்த மோடி அப்போது நீட் மற்றும் ஜிஎஸ்டிகளை எதிர்த்தவர். ஆனால் அவர் பிரதமராக வந்த பின்பு எதையெல்லாம் எதிர்த்தாரோ அதையெல்லாம் செய்து வருகிறார். காரணம் அவருடைய பிடி ஆர்.எஸ்.எஸ் கையில் உள்ளது. தற்போது பிஜேபி தமிழகத்தில் காலூன்ற நினைக்கிறது. அதற்கு ஏஜென்டாக செயல்படுபவர் தான் தற்போதைய தமிழக ஆளுநர் என குற்றம் சாட்டினார்.
செய்தியாளர் : ஆர்.சுகுமாா்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BJP, K.Veeramani