ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

உறவுக்கார பெண்ணுடன் கள்ளத்தொடர்பு..போட்டியாக வந்த ரவுடி வெட்டிக்கொலை - தந்தை மகன் கைது

உறவுக்கார பெண்ணுடன் கள்ளத்தொடர்பு..போட்டியாக வந்த ரவுடி வெட்டிக்கொலை - தந்தை மகன் கைது

அரூர் கொலை

அரூர் கொலை

கள்ளத்தொடர்பு காரணமாக ரவுடி பாபுராஜ் கொலை செய்யப்பட்டது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

அரூர் அருகே கள்ளத்தொடர்பு விவகாரத்தில் ரவுடியை வெட்டிக் கொலை செய்த வழக்கில் தந்தை மகன் இருவரையும் காவல்துறை கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த சேலூர் வனப்பகுதியில் கடந்த 15ஆம் தேதி முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் 40 வயது மதிக்கதக்க ஆண் சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் வனப்பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நபர்  சேலம் மாவட்டம் கூட்டாத்துப்பட்டியைச் சேர்ந்த பாபுராஜ்(40) என்பது தெரியவந்தது. இவர் மீது காரியப்பட்டி காவல் நிலையத்தில் கொலை வழக்கு இருந்ததும் தெரிய வந்தது. இது தொடர்பாக நடந்த விசாரணையில் கொலையில் தொடர்புடைய சிட்லிங் பகுதியை சேர்ந்த விஜயகுமார்(40) அவரது மகன் விக்னேஷ்(20) ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைதுசெய்தனர்.

காவல்துறை விசாரணையில் கைதான விஜயகுமார் அருள்வாக்கு கூறி வந்து உள்ளார். அவருக்கும் அரூர் வேலனூரைச் சேர்ந்த உறவுக்கார பெண் தீர்த்தம்மாள் என்பவருக்கும்  இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் பெயிண்டிங் வேலைக்கு சென்ற போது சில மாதங்களுக்கு முன்பு பாபுராஜிக்கும் தீர்த்தம்மாளுக்கும்  தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த விஜயகுமார் தொடர்பை கைவிடுமாறு பாபுராஜிடம் கூறியுள்ளார்.

அப்போது நான் ரவுடி ஏற்கனவே கொலை செய்துள்ளேன் உன்னை கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்த விஜயகுமார் சம்பவத்தன்று பாபுராஜ் வரவழைத்து அதிக அளவில் மது அருந்த வைத்துள்ளனர். பின்னர் அவரை கொலை செய்துள்ளனர். அந்த தடயங்களை அழிக்க அவரது மகன் விக்னேஷ் உதவி செய்ததாக காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்: ஆர்.சுகுமாா் (தருமபுரி)

First published:

Tags: Crime News, Illegal affair, Illegal relationship, Sexual issues