• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • 25 கிலோ யானை தந்தங்கள் கடத்தல்.. கர்நாடகா டூ தருமபுரி - வனத்துறையிடம் சிக்கிய கும்பல்

25 கிலோ யானை தந்தங்கள் கடத்தல்.. கர்நாடகா டூ தருமபுரி - வனத்துறையிடம் சிக்கிய கும்பல்

யானை தந்தங்களுடன் பிடிப்பட்ட கும்பல்

யானை தந்தங்களுடன் பிடிப்பட்ட கும்பல்

இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் பணத்துக்காக யானைகளை சில சட்டவிரோத கும்பல் வேட்டையாடி வருகிறது. 

 • Share this:
  தருமபுரி அருகே யானைத் தந்தங்களை கடத்தி விற்க முயற்சி செய்த 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். 

  தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஏரியூர் பகுதியில் யானை தந்தங்கள் கடத்த இருப்பதாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாகவே தென் மண்டல இயக்குனர் வன உயிரின குற்ற தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தன. வனத்துறையினர் ஒகேனக்கல் வனப்பகுதி ஒட்டியுள்ள கிராமங்களில்  தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று வனத்துறை அதிகாரி அருண் தலைமையில் 8 பேர் கொண்ட குழு சோகத்தூர் நான்கு வழி சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

  அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்றை தடுத்த நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். காரை சோதனை செய்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் வண்டியை கீழே போட்டுவிட்டு ஓடியுள்ளனர். அவர்களை பிடிக்க வனத்துறை முயன்றபோது கண் இமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்றுவிட்டனர். பிடிபட்ட காரை சோதனை செய்தபோது சுமார் 25 கிலோ 400 கிராம் எடைக்கொண்ட  25 வயது மதிக்கத்தக்க யானையின் தந்தங்களை விற்பனைக்காக எடுத்துச் சென்றது தெரியவந்தது.

  Also Read: பாலியல் தொழில் தொடர்பாக திருநங்கைகள் இடையே போட்டி: அடுத்து அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்!

  காரில் வந்த பவளந்தூர் பகுதியைச் சேர்ந்த சின்னசாமி (வயது 29).பிலிகுண்டு பகுதியை சேர்ந்த வினோத் *(வயது32),நெருப்பூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (வயது 32) ஆகியோரை வனத்துறை  கைது செய்தனர். அவர்களிடமிருந்து யானைத் தந்தங்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட நான்கு சக்கர வாகனம் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களை பறிமுதல்  செய்தனர்.

  பிறகு அவர்களை தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்து பின்பு அவர்களை சிறையில் அடைத்தனர். இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட சேட்டு மற்றும் சக்திவேல் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் காருக்கு பாதுகாப்பாக வந்துள்ளனர். காரில் வந்தவர்கள் மாட்டிக்கொண்டது இருவரும் பைக்கை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். தப்பி ஓடிய 2 பேரை வனத்துறையினர் தேடிவருகின்றனர்.

  இந்தக் கடத்தல் வழக்கு குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, ‘இந்த கும்பல் கர்நாடகா மாநிலத்திலிருந்து யானைத் தந்தங்களை எடுத்து வந்திருப்பது தெரியவருகிறது. சுமார்   25 வயதுடைய யானையின் தந்தங்கள் ஆக இருக்கக்கூடும். தந்தத்தின் மொத்த எடை 25 கிலோ 400  கிராம் கொண்டதாகும். கடந்த இரண்டு வருடங்களாக இந்த தந்தங்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வருகிறது. தற்பொழுது இந்த யானை தந்தங்களை வாங்குவதற்காக திருப்பத்தூரை சேர்ந்த இரண்டு பேர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தருமபுரி குண்டல் பட்டியில் தனியார் தங்கும் விடுதியில் ரூம் எடுத்து தங்கி உள்ளனர்.

  Also Read: நூல் விலை உயர்வை கண்டித்து இன்று திருப்பூரில் முழு அடைப்பு போராட்டம் : 116 அமைப்புக்கள் ஆதரவு

  யானை தந்தங்களை கை மாற்றி விற்பனை செய்ய அவர்களும் ஒரு காரில் வந்துள்ளனர். இவர்களை வனத்துறையினர்  பிடித்ததை பார்த்த அந்த கும்பல் வண்டியை நெடுஞ்சாலை வழியாக திருப்பி வேகமாக சென்று விட்டனர். அவர்களைப் பற்றி பிடிபட்ட இந்த மூன்று பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம். மேலும் இந்த தந்தங்கள் கர்நாடகாவில் யார் மூலம் வாங்கப்பட்டது தற்பொழுது யாருக்கு விற்பனை செய்கிறார்கள். அவர்கள் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து விசாரணை செய்த பின்பே முழு விவரங்கள் தெரியும்  என குறிப்பிட்டனர்.

  செய்தியாளர் : ஆர்.சுகுமார் (தருமபுரி)

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Ramprasath H
  First published: