தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள கரியப்பனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி என்பவரது மகன் கணேசன்(43).விவசாயி. இவருக்கு சொந்தமாக ஒரு ஏக்கர் நிலம் மற்றும் கிணறு ஒன்று உள்ளது. கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம் இவரது நிலத்தில் அளவீடு செய்யும் பணிக்காக கெயில் நிறுவனத்தினர் மற்றும் அதிகாரிகள் நேற்றும் இன்றும் வந்திருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நேற்று பாலவாடி அருகே ஒன்று கூடி எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டம் நடத்தினர்.
மேலும் இன்றும் அதிகாரிகள் நிலத்தை அளவிடும் பணிக்கு வந்ததை கண்டித்து பாலவாடி அருகே குள்ளம் பட்டியில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். விவசாயிகள் போராட்டத்தில் நேற்றும் இன்றும் விவசாயி கணேசன் கலந்து கொண்டார். இந்நிலையில் போராட்டம் நடத்த இடத்திலிருந்து கணேசன் தனது நிலத்துக்கு சென்றுள்ளார். அங்கு அவர் தனது நிலத்தில் உள்ள ஒரு மரத்தில் தூக்கு போட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
Also Read : இனி ரேஷன் கடைகளில் ஆவின் பொருட்கள் விற்பனை - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
இது தொடர்பாக தகவலறிந்த அக்கம் பக்கத்தினர் சென்று உடலை மீட்டனர். இறந்த விவசாயியின் உடலை பாலவாடி அருகே சாலையில் வைத்து போராட்டம் நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட விவசாயியின் உடலை எடுத்து சென்று தருமபுரி இண்டூர் ரோட்டில் செக்காரப்பட்டியில் வைத்து சாலைமறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.