ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

வரதட்சனை கொடுமை.. நான்கு மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை - சாவில் சந்தேகம் இருப்பதாக கண்ணீர்விடும் பெற்றோர்

வரதட்சனை கொடுமை.. நான்கு மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை - சாவில் சந்தேகம் இருப்பதாக கண்ணீர்விடும் பெற்றோர்

பவித்ரா

பவித்ரா

கர்ப்பிணி பெண் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  தருமபுரி அருகே திருமணமான  நான்கு மாதத்தில் கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  தருமபுரி மாவட்டம்,  தொப்பூர் அடுத்த மானியதஅள்ளி மலைப்ப நகர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கவாசன். இவருக்கும் சேலம் மாவட்டம் ஒமலூர் அடுத்த வெங்காயனூரை சேர்ந்த வனிதா(எ) பவித்ரா பி.இ.,பட்டதாரி. இவர்கள் இருவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன் திருமணம்  நடைபெற்றது.  இந்த நிலையில் தற்போது வனிதா 4 மாதம் கர்ப்பிணியாக உள்ளார். மேலும் மாணிக்கவாசன் ராணுவத்தில் இருப்பதாக கூறி திருமணம் செய்துள்ளார். ஆனால் திருமணம் முடிந்து 5 மாதம் கடந்தும் இன்னும் பணிக்கு செல்லவில்லை. இந்நிலையில் மாணிக்கவாசன் வரதட்சனை கேட்டு வனிதாவை, அடிக்கடி துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. நேற்று வனிதாவின் தாய் மாதம்மாள் மகளை பார்க்க சென்றுள்ளார். அப்போது தாய், மகள் இருவரையும் மாணிக்கவாசன்  அடித்ததாக கூறப்படுகிறது.

  Also Read:  சென்னை அம்பத்தூரில் கடத்தப்பட்ட குழந்தை.. 4 மணி நேரத்தில் நாக்பூரில் மீட்பு - நடந்தது என்ன?

  இந்நிலையில்  இன்று அதிகாலை வனிதா வீட்டின் அருகே உள்ள குளியல் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில்  இருந்துள்ளதை அருகே இருந்தவர்கள் பார்த்து தொப்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை மீட்டு  தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.   வனிதா இறந்த விவரம் அவரின் உறவினர்களுக்கு  விரைந்துள்ளனர். அப்போது ஊருக்கு செல்லும் வழியில் காட்டு பகுதியில் ஒரு ஆம்புலன்ஸ் நின்றுள்ளது. அந்த ஆம்புலன்ஸை நிறுத்தி விட்டு, ஒட்டுநர் மது அருந்தி இருந்துள்ளனர்.

  மாணிக்கவாசகன் - பவித்ரா

  அந்த ஆம்புலன்ஸில் வனிதா உடல் இருந்துள்ளது. இதனை கண்ட உறவினர்கள், அதிர்ந்த போய், முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து வனிதாவின் உடல் அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர். ஆனால் மாணிக்கவாசன் மற்றும் அவரது குடும்பத்தினர் யாரும் வரவில்லை. இதனால் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும் அவசரசமாக உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றதாக கூறி தொப்பூர் டோல்கேட் அருகே, உடலை கொண்டு சென்ற ஆம்புலன்சை தடுத்து நிறுத்தி  தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது சிலர் ஆம்புலன்ஸ்சின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர்.

  Also Read:  மண் அகற்றுவதில் தகராறு.. ஊராட்சி மன்ற தலைவருக்கு அடி உதை - வன்கொடுமை சட்டத்தில் ஒருவர் கைது

  இதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினர்  பேச்சுவார்த்தை நடத்தி ஆம்புலன்சை விடுவித்து வனிதாவின் உடல்  பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மீண்டும் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு வந்த உறவினர்கள் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும், மாணிக்கவாசன் மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி அரசு மருத்துவமனை முன்பு அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

  அப்போழுது காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் போராட்டக்காரர்கள் சம்மதிக்காததால், காவல் துறையினர் குண்டு கட்டாக தூக்கி வண்டியில் ஏற்றி கைது செய்தனர். அப்பொழுது காவல் துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

  தொடர்ந்து காவல் துறையினரை கண்டித்து முழக்கங்களை எழுப்பியும், சாலையில் படுத்தும், வாகனத்தை தடுத்து, கைது செய்தவர்களை விடுவிக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இதனால் சேலம் பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. சுமார் ஒரு மணி நேரம் நடந்த சாலை மறியலால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்த வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) தேன்மொழி, பாதிக்கப்பட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.

  செய்தியாளர்: ஆர்.சுகுமாா் (தருமபுரி)

  மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Commit suicide, Crime News, Death, Dowry, Dowry Cases