தர்மபுரி மாவட்டம் பொன்னாகரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் மாதேஷ் - மாங்கம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகளாக குழந்தை இல்லாத நிலையில் ஈரோட்டில் ஒரு தனியார் மருத்துவமனையில் டெஸ்ட் டியூப் மூலம் குழந்தை பெற சிகிச்சை பெற்று வந்தனர்.
இதற்கிடையே 24 வாரங்கள் முடிவடையாத நிலையில் 600 கிராம் எடையுடன் குழந்தை பிறந்தது. இதனையடுத்து பிறந்த குழந்தைக்கு மேல் சிகிச்சை அளிக்க திண்டல் அருகேயுள்ள GRB நியூபார்ன் என்ற குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
குழந்தையை பரிசோதித்த மருத்துவர் பூபதி, குழந்தைக்கு நுரையீரல் அழுத்தம் அதிகமாக இருப்பதை கண்டு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இதையடுத்து மிக அரிதாக பயன்படுத்தும் நைட்ரிக் ஆக்ஸைடு வாயுவை கொடுத்து 4 நாட்கள் வெண்டிலேட்டர் உதவியுடனும், கடந்த 2 மாத காலம் ICU சிகிச்சையில் வைத்தும் குழந்தை தற்போது 1 கிலோ 700 கிராமுடன் நலமுடன் உள்ளது .
மேலும் குழந்தையின் பெற்றோர் கிராம பகுதியைச் சேர்ந்தவர்கள் ஏழை என்பதால் மருத்துவ சிகிச்சையில் 3 லட்ச ரூபாய் மருத்துவர் பூபதி சமூக வலைத்தளங்கள் மூலமாக பொதுமக்களிடம் நிதி திரட்டி சிகிச்சை அளித்துள்ளனர்.
இது குறித்து மருத்துவர் பூபதி கூறுகையில், நவீன மருத்துவத்தில் எடை குறைந்த குழந்தையையும் காப்பாற்றலாம். இது போன்ற எடை குறைந்த குழந்தைகளுக்கு எதிர் காலத்தில் எவ்வித பாதிப்பும் இருக்காது எனவும் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் : ஈரோடு : மா.பாபு
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.