Home /News /tamil-nadu /

பூமி பூஜை: அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய தருமபுரி எம்.பி. செந்தில்குமார்

பூமி பூஜை: அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய தருமபுரி எம்.பி. செந்தில்குமார்

அரசு அதிகாரி மற்றும் கட்சி நிர்வாகியை கண்டிக்கும் செந்தில் குமார் எம்.பி.

அரசு அதிகாரி மற்றும் கட்சி நிர்வாகியை கண்டிக்கும் செந்தில் குமார் எம்.பி.

இந்த ஆட்சி திராவிட மாடல் ஆட்சி. அரசு நிகழ்ச்சிகளை அனைவருக்கும் ஏற்றாற் போல் சமமாக ஒருங்கிணைக்க வேண்டும் – செந்தில்குமார் எம்.பி.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் கட்டுபாட்டில் உள்ள வள்ளல் அதியமான் கோட்ட வளாகத்தில், மாவட்ட ஊராட்சி குழு நிதியில் இருந்து சுமார் 49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன நூலக கட்டிடம் கட்ட கட்டுமான பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.

    இதனை தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி தொடங்கி வைத்தார். தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமார் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பூமி பூஜையை முடித்த பிறகு  மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, மற்றும் திமுக நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகம், இருவரையும் எம்பி செந்தில்குமார் அழைத்தார்.

    அவர்களிடம், ‘இது போன்ற சாஸ்திர சம்பிரதாய நிகழ்ச்சிகளுக்கு என்னை அழைக்காதீர்கள். தமிழகத்தில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் இந்த ஆட்சி திராவிட மாடல் ஆட்சி. இது போன்ற அரசு நிகழ்ச்சிகளை அனைவருக்கும் ஏற்றால் போல் சமமாக ஒருங்கிணைக்க வேண்டும். சடங்குகள் நிறைந்த ஒரு மதம் சார்ந்த நிகழ்ச்சியாக நடத்த கூடாது. அப்படி கடைப்பிடிப்பதாக இருந்தால் என்னை கூப்பிடாதீர்கள் என பலமுறை உங்களிடம் கூறியும் தொடர்ந்து இதுபோல் செய்து வருகிறீர்கள். ஒவ்வொரு இடத்திலும் பிரச்சனை செய்ய வேண்டுமா?’ என தருமபுரி எம்பி செந்தில்குமார் காட்டமாக பேசி வெளியேறினார்.

    இதனால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    நடிகர் போண்டா மணி சிகிச்சை செலவை அரசே ஏற்கும் - அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிவிப்பு

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அரசு நிகழ்ச்சியில் அர்ச்சகர் ஒருவர் பூஜை செய்ததை கண்டித்து அங்கிருந்த அரசு அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Musthak
    First published:

    Tags: Dharmapuri

    அடுத்த செய்தி