பள்ளியில் மாணவியின் கன்னத்தில் கிள்ளிய கணித ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம் லிங்கநாயக்கனஅள்ளி பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப்பள்ளியில் சுற்றுவட்டாரப்பகுதியில் உள்ள ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப்பள்ளியில் சேரன் (வயது 50) என்பவர் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு 9-ம் வகுப்புக்கு பாடம் எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது வகுப்பறையில் மாணவர்களை கணக்கு போடுமாறு கூறியுள்ளார். 9-ம் வகுப்பு மாணவி நோட்டில் கணக்கு போட்டு ஆசிரியர் சேரனிடம் காண்பித்துள்ளார்.
மாணவி கணிதத்தை தவறாக போட்டுள்ளார். இதன்காரணமாக ஆசிரியர் சேரன் அந்த மாணவியை வகுப்பில் இருந்த சக மாணவர்கள் முன்னிலையில் கன்னத்தில் கிள்ளி முதுகில் தட்டியுள்ளார். பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற மாணவி இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதனையடுத்து மாணவியின் பெற்றோர் கடத்தூர் போலீஸ் நிலையத்தில் ஆசிரியர் சேரன் மீது புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் ஆசிரியர் சேரன் வகுப்பறையில் மாணவியின் கன்னத்தில் கிள்ளி முதுகில் தட்டியது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார் கணித ஆசிரியர் சேரனை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தர்மபுரி மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் 9-ம் வகுப்பு மாணிவியிடமும் பள்ளியிலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.