• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • 60 அடி ஆழ கிணற்றில் விழுந்த கார்.. தந்தை, மகள் பலியான சோகம்

60 அடி ஆழ கிணற்றில் விழுந்த கார்.. தந்தை, மகள் பலியான சோகம்

விபத்து

விபத்து

தருமபுரி அருகே கிணற்றில் கார் கவிழ்ந்த விபத்தில் தந்தை, மகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 • Share this:
  தருமபுரி மாவட்டம், காரிமங்கலம்  அருகே கிணற்றுக்குள் பாய்ந்த காரில் பயணம் செய்த தந்தை  மற்றும் மகளை 6 மணி நேரம்  போராட்டத்திற்கு பிறகு  சடலமாக மீட்டனர்.

  சேலம் மாவட்டம், மேட்டூர் பகுதியை சேர்ந்த வீரன் (வயது 44). இவர் பெங்களூரில் தனியார் கார்மெண்ட்ஸ் ஒன்றில் பொறியாளராக (டெக்டைல்ஸ்) பணியாற்றி வருகிறார். இவரது மனைவி உமா( வயது 36).  இவர்களது மகள் சுஷ்மிதா(வயது 13) 8-ம் வகுப்பு படிக்கிறார். இவர்கள் பெங்களூரில் வசித்து வருகின்றனர். பெங்களூருவில் வசிந்து வந்த வீரன் வாரம் ஒருமுறை குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம். இதே போல் கடந்த, இரு தினங்களுக்கு முன் சொந்த ஊரான  மேட்டூருக்கு வந்த வீரன்  நேற்று  குடும்பத்தினருடன் தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக பொலிரோ ஜீப்பில்  பெங்களூருக்கு சென்று கொண்டிருந்தார்.

  Also Read:சந்தேக புத்திக்கொண்ட கணவனால் மனைவிக்கு நேர்ந்த கொடுமை

  பொன்னேரி அருகே உள்ள உணவகம் அருகே செல்லும் போது ஜீப்பின் முன்பக்க டயர் வெடித்தது போன்ற ஒரு சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது. வீரனின் கட்டுபாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த சுமார் 150 அடி தூரம் உள்ள செவத்தான் என்பவருடைய, 65 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றுக்குள் கார் எதிர்பாராதவிதமாக திடீரென பாய்ந்தது. அப்போது கிணற்றில் விழுந்த வேகத்தில் காரின் பின்பக்க கதவு திறந்ததால் உமா காரில் இருந்து தண்ணீரில் விழுந்தார். தண்ணீரில் தத்தளித்தவரை அருகில் இருந்தவர்கள் மீட்டதால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.   கிணற்றில் விழுந்த உமாவை தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

  இதுகுறித்து அருகே இருந்த பொதுமக்கள்  பாலக்கோடு தீயணைப்புத் துறை மற்றும் காரிமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர்  பாலக்கோடு மற்றும் தருமபுரி தீயணைப்புத்துறையினர்  தகவல்  அளித்தனர்.  சம்பவ இடத்திற்கு வந்த  தீயணைப்பு துறையினர்  கிரேன் உதவியுடன் காரில் சிக்கிய வீரன் மற்றும் சுஷ்மிதாவை மழைக்கு மத்தியில் மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர்.            60 அடி ஆழம் கொண்ட இந்த கிணற்றில் 50 அடி வரை தண்ணீர் இருந்ததால் மீட்பு பணிகளில் ஈடுபடுவதில் சிரமம் ஏற்பட்டது. உடனடியாக , 5  விசை பம்புகள்  மூலம், தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்றது.

  Also Read: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.. பெண் உட்பட 6 பேர் சிக்கினர்.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்

  மின் விளக்குகள் உதவியுடன் மீட்பு பணி தொடர்ந்தது. மீட்பு பணியை தருமபுரி  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன்  நேரில் சென்று மழைக்கு மத்தியில் தொடர்ந்து நடந்து வந்த மீட்பு பணியை துரிதப்படுத்தினார். கிணற்றிலிருந்து சுமார் 15 அடிக்கு தண்ணீரை வெளியே எடுக்கப்பட்டது. இரவு 8:45 மணிக்கு கிணற்றில் இருந்து பொலிரோ காருடன் தந்தை மற்றும்  மகள் சடலமாக மீட்கப்பட்டனர்.

  அதை தொடர்ந்து வீரன், சுஷ்மிதாவின் உடல்களை, தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி  மருத்துவமனைக்கு  பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து காரிமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து  விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் அறிந்து உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கதறிய காட்சி அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

  செய்தியாளர்: ஆர்.சுகுமார்  (தருமபுரி)

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Ramprasath H
  First published: