Home /News /tamil-nadu /

ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0 : 2 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது

ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0 : 2 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது

டி.ஜி.பி. சைலேந்திரபாபு

டி.ஜி.பி. சைலேந்திரபாபு

DGP Sylendra Babu : டி.ஜி.பி. சைலேந்திரபாபு அதிரடி உத்தரவால் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வோரை காவலர்கள் கண்டுபிடித்து கைது செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே 2 கிலோ கஞ்சாவை பதுக்கிவைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டனர். ஆப்ரேஷன் 2.O தமிழகத்தில் ஒரு மாதம் அதிரடியாக கஞ்சா வேட்டையில் காவலர்கள் ஈடுபட வேண்டுமென டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின் படி தருமபுரி மாவட்டம் அரூர் உட்கோட்ட பகுதியில் காவலர்கள் கஞ்சா வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்பேது 2 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை பாவக்கல் அடுத்த வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்த வேடியப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டு அரூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.

ALSO READ | டெல்லி சென்ற மர்மத்தை விளக்குவாரா ஸ்டாலின்..? எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம்

தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதால் இதற்கு அடிமையான இளைஞர்கள் பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். டி.ஜி.பி. சைலேந்திரபாபு அதிரடி உத்தரவால் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வோரை காவலர்கள் கண்டுபிடித்து கைது செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 
 
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Sylendra Babu

அடுத்த செய்தி