Home /News /tamil-nadu /

ஒகேனக்கல்லில் ஆர்ப்பரித்து கொட்டும் காவிரி நீர் : ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

ஒகேனக்கல்லில் ஆர்ப்பரித்து கொட்டும் காவிரி நீர் : ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

ஒகேனக்கல்

ஒகேனக்கல்

ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலு வினாடிக்கு 21,000 கன அடியிலிருந்து 25,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால், ஒகேனக்கல் மெயின் அருவி, சினி அருவி, ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    கர்நாடக மற்றும் தமிழக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து, 10 நாட்களுக்கு பிறகு அதிகரிக்க தொடங்கியது. இந்நிலையில் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்குலுவுக்கு வினாடிக்கு 11,000 கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து, நேற்று காலை நிலவரப்படி 21,000 கன அடியாக உயர்ந்தது.

    தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நீர்வரத்து மேலும் அதிகரித்து, இன்று காலை நிலவரப்படி 21,000 கன அடியிலிருந்து 25,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் மெயின் அருவி, சினி அருவி, ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளித்து வருகிறது.

    தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பால், ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க நேற்று முதல் மாவட்ட நிர்வாகம் தடை விதித்த நிலையில், தடை தொடர்ந்து தடை நீட்டித்து வருகிறது. ஏற்கனவே அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், மழை நீர் என்பதால் காவிரி ஆற்றில் செந்நிறமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர கண்காணிப்பு  ஈடுபட்டுள்ளனர். மேலும் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்கும் என்பதால், காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர் வள ஆணைய அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    Must Read : மயக்க ஊசி செலுத்தியும் தப்பியோடிய T23 புலி : நம்பிகுன்னு வனப்பகுதியில் தீவிர தேடுதல் பணி

    கர்நாடக மாநிலத்தில் கன மழை பெய்து வருவதால், மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர் - ஆர்.சுகுமாா், தருமபுரி.
    Published by:Suresh V
    First published:

    Tags: Cauvery water

    அடுத்த செய்தி