ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தாலி கட்டும் நேத்தில் மதுபோதையில் மணமகன்... திருமணத்தை நிறுத்திய மணமகள்

தாலி கட்டும் நேத்தில் மதுபோதையில் மணமகன்... திருமணத்தை நிறுத்திய மணமகள்

தருமபுரி அருகே தாலி கட்டும் நேரத்தில் மணமகன் மதுபோதையில் இருந்ததால் மணமகள் திருமணத்தை நிறுத்தினார்.

தருமபுரி அருகே தாலி கட்டும் நேரத்தில் மணமகன் மதுபோதையில் இருந்ததால் மணமகள் திருமணத்தை நிறுத்தினார்.

தருமபுரி அருகே தாலி கட்டும் நேரத்தில் மணமகன் மதுபோதையில் இருந்ததால் மணமகள் திருமணத்தை நிறுத்தினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தருமபுரி மாவட்டம் தொட்டபடகாண்ட அள்ளி கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி சரவணன் என்பவருக்கும், திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டடிருந்தது.

இவர்களின் திருமணம் கிருஷ்ணகிரி மாவட்டம் வஜ்ஜிரபள்ளம் கிராமத்தில் உள்ள சிவன் கோயிலில் நேற்று காலை நடைபெறவிருந்தது. சரியாக காலை 7 மணி அளவில் பெண் வீட்டார் அனைவரும் கோயிலுக்கு வந்திருந்தனர். இருந்தபோதிலும் முகூர்த்த நேரமாகியும் மாப்பிள்ளை சரவணன் மற்றும் அவரது உறவினர்கள் வரவில்லை.

' isDesktop="true" id="636541" youtubeid="sAXKs5lnn2g" category="tamil-nadu">

இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகளின் வீட்டார் மாப்பிள்ளை வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது மணமகன் சரவணன் மதுபோதையில் உறங்கி கொண்டிருந்தது தெரியவந்தது. இதை பார்த்து கோபமடைந்த பெண்ணின் தாய்மாமன் பாலு, அங்கு உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் குடிகார மணமகன் வேண்டாம் எனவும் திருமணத்திற்காக செலவு செய்த தொகையை மாப்பிள்ளை வீட்டார் திருப்பி அளிக்க வேண்டும் எனவும் அவர் புகார் அளித்தார்.

Also Read : ஓடும் பேருந்தில் மாணவியிடம் அத்துமீறல்... விழுப்புரம் சம்பவத்தால் போக்குவரத்து துறை கவலை - கடும் எச்சரிக்கை

 அப்போது மணமகன் சரவணன், இனி குடிக்க மாட்டேன் எனவும் தயவு செய்து திருமணத்தை நிறுத்த வேண்டாம் எனவும் பெண்ணின் உறவினர்களிடம் மன்றாடினர். எனினும் இதனை ஏற்காத மணமகள் லட்சுமி. குடிகார மாப்பிள்ளை வேண்டாம் என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

First published:

Tags: Crime News, Dharmapuri