முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழக சட்டசபை நிகழ்வு.. 23-ம் புலிக்கேசி படத்தை பார்ப்பது போல் இருக்கு - அண்ணாமலை

தமிழக சட்டசபை நிகழ்வு.. 23-ம் புலிக்கேசி படத்தை பார்ப்பது போல் இருக்கு - அண்ணாமலை

அண்ணாமலை

அண்ணாமலை

தமிழக சட்டப்பேரவை மக்களின் பிரச்னைகளை பேசாத சபையாக தமிழக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  உதயநிதி ஸ்டாலினை  புகழ்கின்ற சபையாக இருப்பதாக அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

  • Last Updated :

தமிழக சட்டமன்றத்தில் நடப்பது தி.மு.க எம்.எல்.ஏக்கள் பேசுவது 23ம் புலிகேசி படம் பார்ப்பது போல இருக்கிறது என பா.ஜ.க தலைவா் அண்ணாமலை  விமர்சித்துள்ளார்.

தருமபுரியில் பா.ஜ.க-வின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பா.ஜ.க தமிழக தலைவா் அண்ணாமலை, “தமிழக சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை பார்த்தாலே தெரியும் தி.மு.க-வின் 130 நாட்கள் ஆட்சி எப்படி இருக்கிறது என்று. 23ம் புலிகேசி படத்தை யாராவது பார்க்கவில்லை என்றால் சட்டப் பேரவையில் தி.மு.க சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேசுவதைக் பார்த்தலே போதும்.  மன்னா.. மன்னா.. உங்களை இப்படி புகழ்கிறார்களே மன்னா..  மக்களின் பிரச்னைகளை பேசாத சபையாக தமிழக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  உதயநிதி ஸ்டாலினை  புகழ்கின்ற சபையாக வைத்துக்கொண்டு காலையிலிருந்து இரவு வரை இருபத்தி மூன்றாம் புலிகேசி படத்தை மீண்டும் மீண்டும் பார்ப்பது போன்று இருக்கிறது.

நீட் விவகாரத்தில் ஒப்புக்குச் சப்பானி போல அங்கே இருப்பவர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கக்கூடிய எம்.பி-க்கள் ,எம்.எல்.ஏ-க்கள் அமைச்சர்கள்  கல்வித்தந்தைகளாக கல்லூரியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் நீட் வருவதற்கு முன்பு ஒரு சீட் 5 கோடி, 10 கோடி என விற்று அதன் மூலம் லாபம் பெற்றவர்கள். நீட் மூலமாக இதனை செய்ய முடியாது என்ற ஒரே காரணத்திற்காக தான் நீட் தேர்வு எதிர்க்கிறார்கள். இந்த உண்மையை அனைத்து மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விவசாயிகள் உழைத்து உழைத்து தேய்ந்து வருகின்றனர். அவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் விதமாக புதிய வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதை எதிர்க்கும் தலைவர்கள் நேரடியாக யாரும் விவசாயத்தில் ஈடுபடுவதில்லை. காரணம் அவர்களுக்கு விவசாயம் குறித்து தெரியாது. இடைத்தரகர்களிடம் சிக்கி தவித்து வரும் விவசாயிகளை காப்பாற்றுவதற்கும், அவர்களை முன்னேற்றுவதற்காக புதிய வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.  எந்த ஒரு விவசாயிக்கும் எதிரான சட்டம் இது இல்லை.  பாஜக தொண்டர்கள் ஒவ்வொரு விவசாயிகளையும் சந்தித்து இச்சட்டத்தின் பயன்கள் குறித்து எடுத்துரைக்க வேண்டும்.

மத்திய அரசு விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசனம் அமைப்பதற்கு மானியம் வழங்கி வருகிறது. விவசாயிகள் மட்டும் தான் முதல் மரியாதை கொடுக்கும் அளவில் தகுதியானவர்கள்.70 ஆண்டு வரலாற்றில் பல்வேறு அலுவலகங்கள் செயல்படாமல் உள்ளது.  இதுபோன்று செயல்படாமல் உள்ள நிறுவனங்களை தனியார் எடுத்து நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.  இதுகுறித்து சுதந்திர தின விழா மேடையில் பாரதப் பிரதமர் மோடி அவர்கள் அறிவித்துள்ளார்.. மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை விற்பதாக தவறான பிரச்சாரங்களில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டு வருகிறது.  எந்தவித காரணமும் இல்லாமல் எதிர்க்கட்சிகள் வரும் 20ஆம் தேதி முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர். பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. " என்றார் .

விநாயகர் சதூர்த்தி  அன்று  தமிழகம் முழுவதும் அவர் அவர்களது வீடுகள் முன்பு விநாயகர்  சிலைகள் வைத்து வழிபட வேண்டும். மேலும்  தமிழக முதல்வர் ஸ்டாலின் கிருஸ்துமஸ் மற்றும் ரம்ஜான் வாழ்த்துகள் தெரிவிப்பார் ஆனால் அவர் விநாயகர் சதூர்த்தி வாழ்த்துகள் தெரிவிக்க மாட்டார். இதனால் மக்கள் நீங்கள் தமிழக முதல்வருக்கு விநாயகர் சதூர்த்தி வாழ்த்துகள் தெரித்து போஸ்டல் அனுப்ப வேண்டும் அப்போதுதான் அவருக்கு தமிழர்களின் உணர்வு  புரியும்” எனப் பேசி முடித்தார்.இக்கூட்டத்தில் பாஜக மாநில மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் : சுகுமார்( தருமபுரி)

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    First published:

    Tags: Annamalai, BJP, DMK, News On Instagram, Politics, Udhayanidhi Stalin