சேலம் மாவட்டத்தில் இருந்து தருமபுரி மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைக்கு குவிந்து வரும் மது பிரியர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா 2வது அலை தொற்று அதிகரித்து வந்ததை அடுத்து தளர்வுகளற்ற ஊரடங்கு அறிவிக்கப்பட்டு டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. அதை தொடர்ந்து கொரோனா தொற்று குறைந்து வருவதால் ஊரடங்கில் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வந்தது.
இதைத்தொடர்ந்து, ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. அதில் கொரோனா தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி அளித்தது.
இதில், கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நோய்த் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் இந்த 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தில் இன்று ஊரடங்கு தளர்வுகளால் மாவட்டத்திலுள்ள 68 அரசு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. மாவட்டத்தில் மற்ற பகுதிகளில் உள்ள மதுபானக் கடைகள் வெறச்சோடி காணப்பட்டன. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் தளர்வுகள் அறிவிக்கப்படாததால் மதுக் கடைகள் திறக்கப்படவில்லை.
அதனால் தருமபுரி மாவட்ட எல்லையான தொப்பூர் அருகே உள்ள பாளையம் புதூர் அரசு மதுபானக் கடையில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஓமலூர், தீவட்டிப்பட்டி மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மதுப்பிரியர்கள் அதிக அளவில் இருசக்கர வாகனங்கள், கார்கள், ஆட்டோக்கள் மூலம் குவிந்து வருகின்றனர்.
Also read: சேலம் அருகே தடுப்பூசி முகாமில் திரண்ட மக்கள் கூட்டம்; தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு!
இந்த மதுக்கடையில் காலை முதலே கூட்டம் அதிகமாக இருந்தும் காவல்துறையினர் குறைவான அளவிலேயே பாதுகாப்பு பணியில் இருந்தனர். தொடர்ந்து பிற்பகலில் 2000-த்திற்கும் மேல் கூட்டம் குவிந்ததால் காவல்துறையினர் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.
மது வாங்க வருபவர்கள் தலா ஒருவருக்கு நான்கு பாட்டில்கள் வீதம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெரும்பாலும் இளைஞர்களே அதிக அளவில் குவிந்து உள்ளனர்.
செய்தியாளர் - ஆர்.சுகுமாா்,
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dharmapuri, Salem, Tasmac