முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சிங்கப்பூர் குடியுரிமை, ஐடி வேலையை உதறிவிட்டு இயற்கை விவசாயத்திற்கு திரும்பிய தம்பதி

சிங்கப்பூர் குடியுரிமை, ஐடி வேலையை உதறிவிட்டு இயற்கை விவசாயத்திற்கு திரும்பிய தம்பதி

சிங்கப்பூர் குடியுரிமை, ஐடி வேலையை உதறிவிட்டு இயற்கை விவசாயத்திற்கு திரும்பிய தம்பதி

5 ஏக்கரில் பாக்கு, அதனுள் ஊடுபயிராக வாழை பயிரிட்டுள்ள இவர்கள் உரத்தேவைக்காக 14 நாட்டு மாடுகள், 50 ஆடுகள், 14 நாட்டுக்கோழிகள் மற்றும் வாத்துகளையும் வளர்த்து வருகின்றனர்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

திரைகடல் ஓடி திரவியம் தேடி சிங்கப்பூரில் குடியுரிமையும் பெற்ற தம்பதி தருமபுரியில் குடியேறி இயற்கை விவசாயம் செய்து வருகின்றனர். யார் இவர்கள்? இவர்கள் என்ன சாதித்துள்ளனர் என்பது குறித்து பார்க்கலாம்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த சோமனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவர் தனது மனைவி விமலாவுடன் கடந்த 2002 ஆம் ஆண்டு பணி நிமித்தமாக சிங்கப்பூர் சென்றிருக்கிறார். அங்கே குடியுரிமை கிடைத்த நிலையில் பிரகதி, கவிநயா, தயாநிதி என 3 குழந்தைகளும் பிறந்திருக்கின்றனர். ஐடி வேலையில் நல்ல வருமானத்துடன் செல்வ செழிப்புடன் வாழ்ந்து வந்த போதும் உறவுகளை துறந்து ஏதோ ஒன்றை இழந்ததாக உணர்ந்திருக்கின்றது இந்த தம்பதி. இதனால் தருமபுரி மாவட்டம் சிட்லிங் மலை கிராமத்தில் சிறுக சிறுக 60 ஏக்கர் நிலத்தை வாங்கிய இருவரும், நாடு திரும்பி இயற்கை விவசாயம் செய்து வருகின்றனர்.

5 ஏக்கரில் பாக்கு, அதனுள் ஊடுபயிராக வாழை பயிரிட்டுள்ள இவர்கள் உரத்தேவைக்காக 14 நாட்டு மாடுகள், 50 ஆடுகள், 14 நாட்டுக்கோழிகள் மற்றும் வாத்துகளையும் வளர்த்து வருகின்றனர்.

வீட்டிற்கு தேவையான சமையல் பொருட்களில் இஞ்சி, பூண்டு, உப்பு மட்டுமே இவர்கள் வெளியில் இருந்து வாங்குகின்றனர். மற்ற காய்கறிகள் அனைத்தையும் தங்கள் நிலத்திலேயே பயிரிடுவதோடு அந்த பணிகளில் தங்கள் பிள்ளைகளையும் ஈடுபடுத்தி விவசாயம் கற்றுக்கொடுக்கின்றனர். இயற்கை சூழலில் தங்கள் பிள்ளைகளை வளர்க்கும் இந்த தம்பதி, தங்களது மூத்த மகளை இயற்கை மருத்துவமும் படிக்க வைத்துள்ளனர்.

First published:

Tags: Dharmapuri