ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பேரறிவாளன் விடுதலை: திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடர எதிர்ப்பு தெரிவித்து தருமபுரி மாவட்ட தலைவர் ராஜினாமா

பேரறிவாளன் விடுதலை: திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடர எதிர்ப்பு தெரிவித்து தருமபுரி மாவட்ட தலைவர் ராஜினாமா

கொலை குற்றவாளியை கொண்டாடும் கூட்டணியில் காங்கிரஸ் தொடர்வதை என் மனம் ஏற்கவில்லை. எனவே, நான் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொறுப்பில் இருந்து விலகிகொள்கிறேன் என காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு தருமபுரி மாவட்ட தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ள சிற்றரசு கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  பேரறிவாளன் விடுதலையை கொண்டாடும் திமுக கூட்டணியில் தொடர எதிர்ப்பு தெரிவித்து தருமபுரி காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் தனது பதிவியை ராஜினாமா செய்தார். இது தொடர்பாக காங்கிரஸ் மாநில தலைவர் கே.அழகிரிக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.

  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அரசியல் சாசனப் பிரிவு 142ன் கீழ் தனக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி அவரை விடுதலை செய்தது.

  பேரறிவாளன் விடுதலையை காங்கிரஸ் நீங்கலாக  தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் வரவேற்றுள்ளன.  அரசியல் கட்சிகள், அமைப்புகள் போன்றவை இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் இந்த தீர்ப்பை கொண்டாடின. அதேவேளையில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு இந்த தீர்ப்பு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  ‘உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. அதேநேரத்தில், குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதையும், அவர்கள் நிரபராதிகள் அல்ல என்பதையும் நாங்கள் அழுத்தமாகக் கூற விரும்புகிறோம்’ என காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்திருந்தார்.

  மேலும் படிக்க: திமுக ஆட்சிக்கு சட்டம் தெரியாது.. அவர்கள் சினிமா கூத்தாடிகள்: சுப்பிரமணியன் சுவாமி

  தமிழகம் முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சி சார்பில்  வாயில் வெள்ளை துணி கட்டி மௌனப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில், பேரறிவாளன் விடுதலையை கொண்டாடும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தருமபுரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிற்றரசு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

  இது தொடர்பாக கே.எஸ்.அழகிரிக்கு சிற்றரசு எழுதியுள்ள கடிதத்தில், “உலகம் போற்றும் உத்தம தலைவர் அமரர் ராஜீவ் காந்தியை கொன்ற கொலை குற்றவாளியை கொண்டாடும் கூட்டணியில் காங்கிரஸ் தொடர்வதை என் மனம் ஏற்கவில்லை. எனவே, நான் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொறுப்பில் இருந்து விலகிகொள்கிறேன். எனது பதவி விலகலை மறுக்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Congress, DMK, DMK Alliance