Home /News /tamil-nadu /

தருமபுரியில் மொபைல் ஸ்கேன் மூலம் கருக்கலைப்பில் ஈடுபட்டவர்கள் கைது

தருமபுரியில் மொபைல் ஸ்கேன் மூலம் கருக்கலைப்பில் ஈடுபட்டவர்கள் கைது

கருகலைப்பு- கைது

கருகலைப்பு- கைது

கருவில் இருந்து குழந்தை வெளியே எடுக்கும் பொழுது சிசுவின் தலை பிறப்புறுப்பில் சிக்கி கொண்டதால் வனஜா உயிருக்கு ஆபத்தான நிலையில் துடித்து அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். ஆனால் கருகலைப்பு செய்த கும்பல் குழந்தையை அப்படியே வயிற்றிலேயே விட்டு விட்டு உண்மையை மறைத்து கருகலைப்பு செய்துவிட்டதாக கூறி வனஜாவை அவரது ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்கவும் ...
    தருமபுரியில் நவீன முறையில் மொபைல் ஸ்கேன் கருவி மூலம் சட்ட விரோதமாக கருவில் இருப்பது ஆண் குழந்தையா பெண் குழந்தையா என கண்டறிந்து கருவிலேயே கருக்கொலை செய்த சம்பவம் தொடர்பாக மூன்று பெண்கள் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டிணம் அருகே உள்ள மலையாண்டஅள்ளி பகுதியை சேர்ந்த வனஜா - ராகவன் தம்பதியனருக்கு ஏற்கனவே இரண்டு பெண்குழந்தைகள் உள்ளது. மீண்டும் கருவுற்ற வனஜா தனது சொந்த பணிக்காக காவேரிபட்டிணத்திற்கு பேருந்தில் செல்லும போது பேருந்தில் அருகே அமர்ந்திருந்த பெண் ஒருவர் அறிமுகம் ஆகி வனஜாவிடம் பேச்சுக்கொடுத்துள்ளார். அப்போது தனக்கு 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் தான் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளதாக வனஜா கூறியுள்ளார்.

    அதற்கு, அருகே இருந்த  பெண்மணி கருவில் இருப்பது ஆணா பெண்ணா என கண்டறிந்து சொல்ல தனக்கு தெரிந்த நண்பர்கள் உள்ளதாகவும் அவர்களிடம் தீர்வு கிடைக்கும் என கூறி வனஜாவிடம் திருப்பத்தூரை சேர்ச்த ஜோதி என்பவரின் தொடர்பு எண்ணை கொடுத்துள்ளார். அப்பொழுது அவரை தொடர்பு கொண்ட போது கடந்த 12 ந் தேதி தருமபுரி பேருந்து நிலையத்திற்கு வரசொல்லி அங்கிருந்து ஆட்டோ ஓட்டுனரான வெங்கடேசன் என்பவரது வீட்டிற்கு காரில் அழைத்து சென்றனர்.

    அங்கேவைத்து, கருவில் இருப்பது ஆணா பெண்ணா என கண்டறியும் நவீன மொபைல் ஸ்கேன் கருவி கொண்டு சோதனை செய்துள்ளனர். அதனை தொடர்ந்து  சோதனையில் பெண்குழந்தை என தெரிந்ததும் அதனை கலைக்க வனஜா ஜோதியிடம் சம்மதம் தெரிவித்துள்ளார். அதனையடுத்து கருகலைப்பு செய்ய சுமார் 20 ஆயிரம் ஆகும் என தெரிவித்தார். பின்னர் 14 ம் தேதி பணத்துடன் வந்த வனஜாவிற்கு எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி கருகலைப்பு நடந்துள்ளது.

    இதையும் படிங்க: தூய்மை பணியாளர் விவகாரம்: மதுரை மாநகராட்சி மேயர் மீது தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார்!


    இதில் கருவில் இருந்து குழந்தை வெளியே எடுக்கும் பொழுது சிசுவின் தலை பிறப்புறுப்பில் சிக்கி கொண்டதால் வனஜா உயிருக்கு ஆபத்தான நிலையில் துடித்து அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். ஆனால் கருகலைப்பு செய்த கும்பல் குழந்தையை அப்படியே வயிற்றிலேயே விட்டு விட்டு உண்மையை மறைத்து கருகலைப்பு செய்துவிட்டதாக கூறி வனஜாவை அவரது ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

    வீட்டிற்கு சென்ற வனஜாவிற்கு அதிக வலி ஏற்பட்டதால் அவரை அவரது தாயார் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். ஆனால் ஆபத்தான நிலையில் வனஜா இருந்ததால் அவரை கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதன் பேரில் அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் வனஜா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    மேலும் படிக்க: தக்காளி திருடிய இளைஞர் கைது.. ஏற்கனவே ஆப்பிள் திருடி கைதானது விசாரணையில் அம்பலம்


    அவர் கொடுத்த தகவலின்பேரில், தருமபுரி மாவட்ட மருத்துவத்துறை ஊரக பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கனிமொழி தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். மருத்துவர் கனிமொழி, தருமபுரி நகர காவல் ஆய்வாளர் நவாஸ், காவல் உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட காவல் துறையினர் ராஜபேட்டையில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    சட்ட விரோத கருகலைப்பு


    அப்போது திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த ஜோதி, சதீஷ்குமார், சுதாகர், தருமபுரி மாவட்டம் அழகாபுரி பகுதியை சேர்ந்த கற்பகம், பாப்பாரப்பட்டி பகுதியை சேர்ந்த சரிதா, பாரதிபுரம் பகுதியை சேர்ந்த குமார், செட்டிகரை பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் வெங்கடேசன் ஆகிய 7 பேரும் பாலின தேர்வு தடை செய்தல் சட்டத்திற்கு எதிராக , ஆட்டோ டிரைவர் வெங்கடேஷின் வீட்டில்  கருவில் உள்ளது ஆணா அல்லது பெண்ணா என்பதை கண்டறிந்து சட்டவிரோதமாக கருகலைப்பில் ஈடுபட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து 7 பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள்  பயன்படுத்திய கார் மற்றும் ஆட்டோ ஸ்கேன் மிஷின் ஆகியவறை பறிமுதல் செய்தனர்.  மேற்கொண்டு இவர்களுக்கு வேறு இடைதரகர்களுடன் தொடர்பு உள்ளதா எனவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    செய்தியாளர்: சுகுமார்- தருமபுரி
    Published by:Murugesh M
    First published:

    Tags: Abortion, Dharmapuri

    அடுத்த செய்தி