Home /News /tamil-nadu /

வெகு சிறப்பாக நடைபெற்ற தருமபுரம் பட்டினப் பிரவேசம்- அண்ணாமலை, ஹெச்.ராஜா பங்கேற்பு

வெகு சிறப்பாக நடைபெற்ற தருமபுரம் பட்டினப் பிரவேசம்- அண்ணாமலை, ஹெச்.ராஜா பங்கேற்பு

தருமபுரம் பட்டிணப் பிரவேசம்

தருமபுரம் பட்டிணப் பிரவேசம்

மயிலாடுதுறை மாவட்டத்தில், தருமபுரம் ஆதீனத்தை பக்தர்கள் பல்லக்கில் தூக்கி வீதியுலா செல்லும் பட்டினப் பிரவேசம் நிகழ்வு இன்று நடைபெற்றது.

    16ம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட தருமபுரம் ஆதீனத்தில், பல ஆண்டுகளாக, குருபூஜை விழாவின் ஒரு பகுதியாக தருமபுர ஆதீனகர்த்தரை பக்தர்கள் பல்லக்கில் தூக்கி செல்லும் நிகழ்வு நடைபெற்றுவருகிறது. மனிதரை மனிதர் தூக்குவது இழிவானது எனக் கூறி திராவிடர் கழகத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்தொடர்ச்சியாக பட்டினப் பிரவேசம் நிகழ்வுக்கு மயிலாடுதுறை கோட்டாசியர் தடைவிதித்தார். இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தமிழக அரசின் இந்த உத்தரவுக்கு எதிராக ஆன்மீக அமைப்புகள் பல எதிர்ப்பு தெரிவித்தன. குறிப்பாக, மதுரை ஆதினம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். உயிரைக் கொடுத்தாவது இந்த பட்டினப் பிரவேசத்தை நடத்துவோம் என்றோர். ஆன்மீக விவகாரங்களில் தலையிட்டால் அமைச்சர் நடமாட முடியாது என்று ஜீயர் எச்சரிக்கைவிடுத்தார்.

    பட்டிணப் பிரவேச நிகழ்ச்சியில் அண்ணாமலை, ஹெச்.ராஜா


    பா.ஜ.க சார்பிலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. நானே நேரில் சென்று பல்லக்கு தூக்குவேன் என்றார் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை. அதனையடுத்து, சைவ மடங்களைச் சேர்ந்த ஆதீன கர்த்தர்கள் இரண்டு வாரங்களுக்கு முன்னர், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து பட்டினப் பிரவேச நிகழ்வுக்கு இருக்கும் தடையை நீக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாக மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    இரண்டுமுறை கேட்டும் வீட்டின் மின் இணைப்பு எண்ணை சீமான் தெரிவிக்கவில்லை- அமைச்சர் செந்தில் பாலாஜி

    இந்தநிலையில், இன்று மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் ஆதீன கர்த்தர் 27வது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் புகழ்வாய்ந்த பட்டணப் பிரவேச பல்லக்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தநிகழ்ச்சியில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ஹெச்.ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர். இருவரும் சில விநாடிகள் பலக்கைத் தூக்கினர்.

    அதனையடுத்து, பக்தர்கள் தொடர்ந்து தூக்கி ஊர்வலம் நடைபெற்றது. இதுகுறித்த அண்ணாமலை ட்விட்டர் பதிவில், ‘22ஆம் தேதி தருமபுர ஆதினமான ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் பட்டின பிரவேச நிகழ்ச்சியில் நாம் பங்கேற்போம் என்றிருந்தோம். அதே போல் இன்று இந்த வரலாற்று நிகழ்வில் ஒரு சிஷ்யனாகப் பங்கேற்றதை என் பாக்கியமாகக் கருதுகிறேன். தமிழகத்தில் ஆன்மீக மறுமலர்ச்சி’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Dharmapuram Aadheenam

    அடுத்த செய்தி