மதுரை ஆதீனம் உடல்நலம் குறித்தும், மதுரை ஆதீன அறை சீல் வைக்கப்பட்டது குறித்தும் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசன்னிதானம் விளக்கம் அளித்துள்ளார்.
புகழ்பெற்ற மதுரை ஆதீனத்தின் 292ஆவது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகள் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை நேற்று நேரில் சந்தித்த மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், அவரது உடல்நிலை குறித்து விசாரித்தார்.
பின்னர் மதுரை ஆதீனத்திற்கு நேரில் சென்று, மதுரை ஆதினத்தின் முக்கிய அறைகளை ஆதீன வழக்கப்படி பூட்டி சீல் வைத்தார். மதுரை ஆதீனம் சித்தி அடைந்தால், அவருக்காக எழுப்பப்படும் குரு முகூர்த்த இடம் குறித்து, நேரில் ஆய்வு மேற்கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்ட நிலையில், இது சம்பந்தமாக இன்று தருமபுரம் ஆதீனத்தில் 27ஆவது ஆதீன குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார்.

மதுரை ஆதினத்திற்கு சீல்
அப்போது அவர் கூறும்போது, மதுரை ஆதீனம் உடல்நலத்துடன் இருந்தபோது மார்கழி மாதம் சந்தித்த போது, ஆதீனத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தனது குரு மூர்த்தம் குறித்தும் தனது விருப்பத்தை என்னிடம் வெளியிட்டார்.
Read More : மதுரை ஆதீன மடத்தின் அடுத்த மடாதிபதி யார்? - சர்ச்சை கிளப்பும் நித்யானந்தா அறிக்கை
நேற்று மதுரையில் அவரை சந்தித்த பொழுது என்னைப் பார்த்து கண்ணீர் விட்டதுடன், எனது கையால் தண்ணீர் அருந்தினார். ஏற்கனவே கூறிய ஆலோசனையின்படி தற்போதைய மதுரை ஆதீன இளவரசு மற்றும் வழக்கறிஞர் முன்னிலையில் ஆதினத்தின் அறைகளுக்கு சீல் வைத்ததாகவும், இது அனைத்து ஆதீனங்களின் நடைமுறையில் உள்ள வழக்கம் தான் என்றும் தெரிவித்தார்.

மதுரை ஆதீனம்
மேலும், “மதுரை ஆதீனம் அவர்கள் தருமபுரம் ஆதீனத்தில், ஐந்து ஆண்டுகள் தம்பிரானாக இருந்துள்ளதாகவும், தானும் ஐந்து ஆண்டுகள் மதுரை ஆதீனம் அவர்களிடம், பணிவிடையாக இருந்ததாகவும், தற்போதைய மதுரை ஆதீன இளவரசராக இருப்பவர் தருமபுர ஆதீனத்தில் கட்டளை தம்பிரான் ஆக இருந்தவர் தான், நாங்கள் மதுரை ஆதீனத்தை எந்தவித நோக்கத்துடனும் பூட்டி சீல் வைக்க வில்லை.
Must Read : மதுரை ஆதீனம் பயன்படுத்திய அறை பூட்டி சீல் வைப்பு - நித்தியானந்தா அறிக்கை எதிரொலியா?
மதுரை ஆதீனம் நோயிலிருந்து மீண்டு விரைவாக வர வேண்டும் என்பதே எங்களது எண்ணம் என்று தெரிவித்தார்.
செய்தியாளர் : கிருஷ்ணகுமார், மயிலாடுதுறைஇன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.