தனுஷ்கோடியை ஒரே நாளில் உருக்குலைத்த ஆழிப்பேரலை.. புயல் நினைவு சின்னங்களை பாதுகாக்க கோரிக்கை

தனுஷ்கோடியை ஒரே நாளில் உருக்குலைத்த ஆழிப்பேரலை.. புயல் நினைவு சின்னங்களை பாதுகாக்க கோரிக்கை

தனுஷ்கோடி

2017ம் ஆண்டு மத்திய அரசு 70 கோடி ரூபாய் செலவில் தனுஷ்கோடிக்கு நெடுஞ்சாலை அமைத்தது. எனினும், எஞ்சியிருக்கும் கட்டடங்களில் உள்ள சுண்ணாம்பு கல், பவள பாறைகளை சுற்றுலாப் பயணிகள் பெயர்த்தெடுத்து செல்வதை தடுத்து, கட்டடங்களை பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

  • Share this:
இந்தியாவின் தென்கோடியில் உள்ள ராமேஷ்வரம் தீவின் கிழக்கு முனையில் அமைந்திருந்த தனுஷ்கோடி நகரம், இந்தியாவில் இருந்து இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு இடையே போக்குவரத்துக்கு பாலமாக திகழ்ந்து வந்தது. துறைமுக நகராகவும், யாத்திரை தலமாகவும் வரலாற்றில் சிறப்பிடம் பிடித்த தனுஷ்கோடியில் 1964-ம் ஆண்டு டிசம்பர் 22-ம் தேதி நள்ளிரவில் ஏற்பட்ட மிகப் பெரிய கடல் கொந்தளிப்பால் அந்நகரமே உருக்குலைந்தது.

நள்ளிரவில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ஆயிரக்கணக்கான உயிர்களை ஆழிப்பேரலை இரையாக்கியது. ரயிலில் தனுஷ்கோடிக்கு சுற்றுலா வந்த 120 மணவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். கடல் நீர் ஊருக்குள் புகுந்ததால், தனுஷ்கோடியே சின்னாபின்னமாகி கிடந்தது. போர் நடந்தது போல் பார்க்கும் இடமெல்லாம் மனித சடலங்களே காட்சியளித்தன. தனுஷ்கோடி ஒரே நாள் இரவில் அழிந்த சம்பவம் ஒட்டுமொத்த நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

புயலால் சேதமடைந்த விநாயகர் கோயில், தேவாலயம், அஞ்சலக கட்டடங்கள் வரலாற்றின் அரிச்சுவடாக இன்றளவும் காட்சியளித்து வருகின்றன. ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வரும் பயணிகள், இந்த சிதிலமடைந்த கட்டடங்களை பார்த்து செல்கின்றனர்.



2017ம் ஆண்டு மத்திய அரசு 70 கோடி ரூபாய் செலவில் தனுஷ்கோடிக்கு நெடுஞ்சாலை அமைத்தது. எனினும், எஞ்சியிருக்கும் கட்டடங்களில் உள்ள சுண்ணாம்பு கல், பவள பாறைகளை சுற்றுலாப் பயணிகள் பெயர்த்தெடுத்து செல்வதை தடுத்து, கட்டடங்களை பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

 



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sankaravadivoo G
First published: