இன்னைக்கு சுதந்திர தினமா? குடியரசுத் தினமா? கன்பியூஸான தனபால்

சென்னை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றுவைத்தார். அந்த நிகழ்வில் துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர்.

இன்னைக்கு சுதந்திர தினமா? குடியரசுத் தினமா? கன்பியூஸான தனபால்
தனபால்
  • News18
  • Last Updated: August 16, 2019, 10:47 AM IST
  • Share this:
தமிழக சட்டப்பேரவைத் தலைவர் சபாநாயகர் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் சுதந்திர தின விழாவை குடியரசு தினவிழா என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். அந்த ட்வீட் தற்போது நீக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் 73-வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற விழாவில், பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

தனபால்அதேபோல, சென்னை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றுவைத்தார். அந்த நிகழ்வில் துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர். இந்தநிலையில், சுதந்திர தினவிழாவில் கலந்துகொண்டது குறித்து சபாநாயகர் தனபால் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

அதில், ‘ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் என்று குறிப்பிடுவதற்கு பதிலாக செப்டம்பர் 15 குடியரசு தினம் என்று குறிப்பிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து அந்த ட்விட் வைரலானது. தற்போது அந்த ட்விட் நீக்கப்பட்டுள்ளது.

Also see:
First published: August 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்