ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையன்று பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்.. டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு

ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையன்று பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்.. டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு

டிஜிபி சைலேந்திரபாபு

டிஜிபி சைலேந்திரபாபு

சிறப்பு குறைதீர் முகாம்களை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடத்த வேண்டும் என அறிவுறுத்தல்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஓவ்வொரு வாரமும் புதன்கிழமையன்று பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்களை நடத்த வேண்டும் என காவல் ஆணையர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுதொடர்பான சுற்றறிக்கையில், மாவட்ட ஆட்சியர்கள் திங்கள்கிழமை தோறும் குறைதீர்ப்பு முகாம் நடத்துவது போல், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும், காவல் ஆணையர்களும் ஒவ்வொரு புதன்கிழமையும் பொதுமக்களை சந்தித்து மனுக்கள் பெற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: என் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்காமல் ஈபிஎஸ் தடுத்தார்: ஓபிஎஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

சிறப்பு குறைதீர் முகாம்களை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடத்த வேண்டும் என்றும், அதில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் டிஜிபி அறிவுறுத்தி உள்ளார்.

First published:

Tags: Sylendra Babu, Tamilnadu police