வீட்டில் இருந்தே ஆன்லைனில் விளையாடி அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசைப்பட்டு ஆன்லைன் மோசடிகளில் சிக்கில் சிறுக சிறுக சேமித்த பணத்தை இழந்து மனவேதனையில் தற்கொலை செய்துகொள்ளும் நபர்களின் எண்ணிக்கை சமீபத்தில் அதிகரித்து வருகிறது. ஆன்லைனில் விளையாட கடனுக்கு மேல் கடன் வாங்கி பணத்தை இழந்து கடனில் மூழ்கி தற்கொலை முடிவை எடுக்கும் அவலநிலை தொடர்கதையாக இருந்து வருகிறது. ஆன்லைன் ரம்மி, ட்ரேடிங்க் ஆப்கள் மூலம் இந்த விபரீத முடிவுகளுக்கு காரணமாக அமைந்துவிடுகின்றன.
இது தொடர்பான புகார்களும், இதனைத் தடுக்க பல்வேறு கோரிக்கைகளும் எழுந்தன. இதனைத் தொடர்ந்து ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ரம்மி நிறுவனங்கள் மேலமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அந்த சட்டத்திற்கு தடைபெற்றனர். இதையடுத்து மீண்டும் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுக்களை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், ஆன்லைன் ரம்மியில் வரும் நடிகர்களின் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்படும் எனவும் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “சமீப காலமாக ஆன்லைன் ரம்மி விளையாட்டு எனும் மோசடி அதிகளவில் நடந்து வருகிறது. ஆன்லைன் ரம்மி விளையாட்டு முதலில் ஜெயிப்பது போல ஆசையை தூண்டிவிட்டு, பின்பு அனைத்து பணத்தையும் இழக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பிடித்த நடிகர்கள் ரம்மி விளம்பரங்களில் வருவதைப் பார்த்து ஏமாந்து யாரும் இந்த மோசடியில் சிக்க வேண்டாம்.
Must Read : ஹெச்.டி.எஃப்.சி. வங்கியில், 100க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் கணக்கில் தவறுதலாக ரூ.13 கோடி வரை வரவு?
இது ஆன்லைன் ரம்மி அல்ல, மோசடி ரம்மி. ஆன்லைன் ரம்மி விளையாடும் நபர்களுக்கு அவமானம், குடும்பப் பிரச்னை மற்றும் தற்கொலை செய்துகொள்ளும் நிலை ஏற்படும். எனவே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் யாரும் ஈடுபட வேண்டாம்” என அந்த வீடியோவில் சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.