கொரோனா 3ஆவது அலை போலீசாருக்கு சவாலாக இருக்கும் - டி.ஜி.பி. சைலேந்திரபாபு எச்சரிக்கை

சைலேந்திர பாபு

தமிழக காவல்துறையைச் சேர்ந்த 136 பேர் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் 39 பேர் இறந்தனர்.

 • Share this:
  கொரோனா 3ஆவது அலை வந்தால் காவல்துறையினருக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்தார்.

  சென்னை எழும்பூரில் உள்ள போலீஸ் மருத்துவமனையில் 75 படுக்கை வசதிகள் உள்ளன. அதற்கான ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஜெனரேட் பிளான்ட் வசதி ரோட்டரி சங்கத்தால் (கிழக்கு) அமைக்கப்பட்டுள்ளது.

  அதன் தொடக்க விழா அந்த மருத்துவமனை வளாகத்தில் நடந்தது. காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் முன்னிலையில் நடந்த இந்த விழாவில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்து கொண்டார். ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஜெனரேட் பிளான்ட்டை அவர் தொடங்கி வைத்தார்.

  அந்த விழாவில் சைலேந்திரபா பேசுகையில், “கொரோனா முதல் அலை, 2ஆவது அலைகளில் மருத்துவர்கள், செவிலியர்களை போல போலீசாரும் முன்கள பணியாளர்களாக பணியாற்றினார்கள். இதில் தமிழக காவல்துறையைச் சேர்ந்த 136 பேர் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் 39 பேர் இறந்தனர்.

  கொரோனா பெருந்தொற்று 3ஆவது அலை வந்தால் போலீசாருக்கு பெரும் சவாலாக இருக்கும். அதனால்தான் இனிமேல் உயிரிழப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக, நாம் தயார் நிலையில் இது போன்ற முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டி இருக்கிறது.

  Must Read : மறைந்த மதுசூதனனின் மொத்த மருத்துவ செலவை அதிமுக ஏற்றது... எவ்வளவு தெரியுமா?

  தமிழக காவல்துறையை பொறுத்தமட்டில் 98 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இன்னும் சில நாட்களில் 100 சதவீததத்தை எட்டி விடும். போலீசாரின் நலன்கள் பேணி காக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அதன்படி தமிழக காவலர்களின் நலன் காக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.” இவ்வாறு கூறினார்.
  Published by:Suresh V
  First published: