ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்களுக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை- டி.ஜி.பி சைலேந்திர பாபு அறிவிப்பு

காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்களுக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை- டி.ஜி.பி சைலேந்திர பாபு அறிவிப்பு

டிஜிபி சைலேந்திர பாபு

டிஜிபி சைலேந்திர பாபு

வட மாநிலத்தவர்களை பணியில் அமர்த்தும் போது அவர்களைக் குறித்து முழுமையாக தெரிந்து கொண்டு பணியில் அமர்த்த வேண்டும் என்று டி.ஜி.பி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுப்பு அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வேலூர் சரக ஆய்வு கூட்டத்தில் தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திர பாபு பங்கேற்று சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சைலேந்திர பாபுவை, வேலூர் சரக காவல்துறை துணைத்தலைவர் முனைவர்.ஜ.ஆனி விஜயா மற்றும் வேலூர் சரக நான்கு மாவட்டங்களை சேர்ந்த காவல் கண்காணிப்பாளர்களும் வரவேற்றனர்.

முன்னதாக வேலூர் மாவட்ட காவல்துறை சார்பாக காவலர்கள் அளித்த அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டு மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற காவல் ஆய்வாளர்களுக்கு, சமூக விரோதிகள் மற்றும் போதை ஆசாமிகளிடமிருந்து தங்களை தற்காத்துக்கொள்ளும் பயிற்சியினை சிறப்பு பயிற்சி பெற்ற காவல் ஆய்வாளர்கள் செய்து காட்டியதை பார்வையிட்டார்.

இதை தொடர்ந்து நக்சலைட் சிறப்பு பிரிவினர்களின் பல்வேறு செயல்பாடுகள் குறித்து விளக்கும் புகைப்பட கண்காட்சி மற்றும் வேலூர் சரக காவல் துறையினரின் சிறப்பான செயல்பாடுகளை விளக்கும் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார்.

காவல் ஆய்வாளர்கள் தங்கள் உடல் நலத்தை சீராக பேணி காத்திட வேலூர் சரகத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய உள்ள 4. மாவட்டத்திற்கு ரூபாய் 8 லட்சம் மதிப்பிலான உடற் பயிற்சி உபகரணங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு வழங்கினார்.

பின்பு வேலூர் சரகத்தில் உள்ள 4 மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் காணாமல் போன 12 லட்ச ரூபாய் மதிப்பிலான 120 கைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதனை அதன் உரிமையாளர்களிடம் வழங்கினார்.

அதன்பிறகு நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் வேலூர் சரகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் நடைபெறும் குற்றங்களை தடுப்பது குறித்தும் நிலுவையில் உள்ள பழைய குற்றங்களில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பது குறித்தும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுப்பு அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அரசாணை வெளியிடப்படும்.

67 நாள்களில் 26 நாடுகள் பயணம்: இந்தியா வந்தடைந்த சத்குருவுக்கு குஜராத் உற்சாக வரவேற்பு

வட மாநிலத்தவர் பல்வேறு குற்றங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நிலையில் வட மாநிலத்தவர்களை பணியில் அமர்த்தும் போது அவர்களைக் குறித்து முழுமையாக தெரிந்து கொண்டு பணியில் அமர்த்த வேண்டும் என்றார்.

மேலும் மொபைல் போனில் ஆன்லைனில் பல்வேறு விதமான மோசடிகள் நடைபெறுவதாகவும் இதுகுறித்து பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றார்.

First published:

Tags: Sylendra Babu