பள்ளி மற்றும் கல்லூரி அருகே குட்கா மற்றும் கஞ்சா போன்ற போதைப் பொருட்களை விற்றால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை விடுத்துள்ளார்.
டிசம்பர் 6ஆம் தேதி முதல் ஜனவரி 6ஆம் தேதி வரை கஞ்சா மற்றும் லாட்டரி சீட்டு ஒழிப்பு வேட்டை நடத்த வேண்டும் என அனைத்து காவல் துறையினருக்கும் தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் மூலம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
ஒருவேளை இதுபோன்ற கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டால் அவர்கள் மீது என்னென்ன நடவடிக்கை பாயும் என்பதை தமிழக காவல் இயக்குனர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை அடையாளம் கண்டு கைது செய்து சிறையில் அடைப்பதை தொடர்ந்து இவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
அதேபோன்று கஞ்சா மற்றும் குட்கா கடத்தல் மது விற்பனை சங்கிலியை உடைக்க மொத்த கொள்முதல் செய்யும் நபர்களுக்கு கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், கஞ்சா குட்கா லாட்டரி பழக்கத்துக்கு அடிமையான மாணவர்களை அடையாளம் கண்டு மனநல ஆலோசகர் மூலம் அவர்களை இப்பழக்கத்தில் இருந்து மீட்டெடுக்க வேண்டும்.
பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் குடியிருப்பவர்களை கொண்டு காவல் ஆய்வாளர் வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கி ரகசிய தகவல்களை பெற்று விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்.
ஆந்திர மாநிலத்தில் பயிரிடப்படும் கஞ்சா பயிரை ஒழிக்க ஆந்திர போலீசாருடன் விஷேச கூட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதை மாநில போதை தடுப்பு பிரிவு முன்னின்று செயல்படுத்த வேண்டும்.
அதேபோன்று ரயில்வே காவல்துறையினர் இரவிலும் ரயில் நிலையங்களின் கண்காணிப்பை தீவிரப்படுத்தி கஞ்சா குட்கா லாட்டரி ஆகியவற்றை கைப்பற்றும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.
இந்த ஒரு மாதத்துடன் இந்த நடவடிக்கை நின்றுவிடாமல் காவல் நிலைய நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர்களுக்கு கஞ்சா, குட்கா, லாட்டரி போன்ற செயலில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்காணிக்கும் பொறுப்பையும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
Must Read : இவற்றை செய்யாவிட்டால் இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை ஏற்படும் : இந்திய மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை
இந்த பணியினை சென்னை காவல் ஆணையர், கூடுதல் காவல் இயக்குனர் சட்டம்-ஒழுங்கு ஆகியோர் தினமும் கண்காணித்து அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.