முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கொரோனா ஊரடங்கை மீறியதாக போடப்பட்ட 8.98 லட்சம் வழக்குகள் ரத்து - டிஜிபி சைலேந்திர பாபு சுற்றறிக்கை

கொரோனா ஊரடங்கை மீறியதாக போடப்பட்ட 8.98 லட்சம் வழக்குகள் ரத்து - டிஜிபி சைலேந்திர பாபு சுற்றறிக்கை


டிஜிபி சைலேந்திர பாபு

டிஜிபி சைலேந்திர பாபு

TN Lockdown | கொரோனா ஊரடங்கு காலத்தில் போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :

கொரோனா ஊரடங்கு காலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள், வதந்தி பரப்பியவர்கள் , உண்மைக்கு மாறான செய்திகளை பரப்பியவர்கள் என பதியப்பட்ட 8,98,948 வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் 15,66,084 பேர் வழக்குகளில் இருந்து விடுக்கப்பட்டுள்ளதாகவும் டிஜிபி சைலேந்திர பாபு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் சட்டமன்றத்தில் முதல்வர், கொரோனா காலத்தில் உத்தரவை மீறியதற்காக போடப்பட்ட வழக்குகள் கைவிடப்படுவதாக தெரிவித்தார். கடந்த பிப்ரவரி மாதம் சட்டமன்றத்தில் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் , ஊரடங்கு காலத்தில் உத்தரவை மீறி வதந்தி பரப்பியவர்கள், உண்மைக்கு மாறாக செய்திகளை பரப்பியவர்கள் மீது 10 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் வன்முறையில் ஈடுபட்ட குற்றங்களுக்காக பதிவு செய்யப்பட்ட வழக்குகள், முறைகேடான வழிகளில் இ பாஸ் பெற்று பயன்படுத்தியது, போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தது தொடர்பான வழக்குகள் தவிர மற்ற வழக்குகள் கைவிடப்படும் என அறிவித்தார்.

இது தொடர்பாக கடந்த மாதம் 5ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணையின் அடிப்படையில் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை தவிர அனைத்து மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் , கொரோனா ஊரடங்கு காலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள், வதந்தி பரப்பியவர்கள், உண்மைக்கு மாறான செய்திகளை பரப்பியவர்கள் ஆகியோர்கள் மீது சுமார் 10 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவ்வழக்குகளுள் வன்முறையில் ஈடுபட்டு குறிப்பிட்ட குற்றங்களுக்காக பதிவு செய்யப்பட்ட வழக்குகள், முறைகேடான வழிகளில் இ-பாஸ் பெற்று பயன்படுத்தியது, மற்றும் காவல் துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்தது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் போன்றவற்றை தவிர மற்ற அனைத்து வழக்குகளும் பொதுமக்களின் நலன் கருதி கைவிடப்படுகின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.

ALSO READ |  நெல்லை கல் குவாரி விபத்தில் 3 பேர் பலி.. பாறைகள் சரிவால் மீட்பு நடவடிக்கையில் தோய்வு

இதன்படி தற்போது மொத்தம் 8,98,948 வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் போலீஸ் வடக்கு மண்டலத்தில் (north zone ) 3,12,168, மத்திய மண்டலத்தில் (central Zone) 1,35,307, மேற்கு மண்டலத்தில் (west zone ) 1,25,034, தென்மண்டலத்தில் (South Zone) 1,60,233 வழக்குகள் அடங்கும். இதுதவிர சென்னை,சேலம் , திருநெல்வேலி , திருப்பூர் , மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகர் போலீசாரால் பதியப்பட்ட வழக்குகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் 15,66,084 பேர் வழக்குகளில் இருந்து விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Lockdown, MK Stalin, Sylendra Babu