தூத்துக்குடியில் சிஏஏ போராட்டத்தை கண்காணிக்க காவல்துறை அதிகாரி நியமனம் - கனிமொழி எதிர்வினை

திமுக எம்.பி., கனிமொழி

 • Share this:
  கடந்த ஆண்டு தூத்துக்குடியில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் உயிரிழந்தனர். அப்போது, அங்கே பொறுப்பேற்றிருந்த எஸ்பி-யை சிஏஏ எதிர்ப்புப் போராட்டங்களைக் கண்காணிக்க தூத்துக்குடிக்கு நியமித்ததை மக்களவை உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

  தமிழகத்தில் சிஏஏ எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இதனை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

  தூத்துக்குடி மாவட்டத்திற்கு மகேந்திரன் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் தூத்துக்குடி மக்களை உறுப்பினரும் திமுக-வின் மகளிரணிச் செயலாளருமான கனிமொழி, “மாநிலம் முழுக்க நடைபெறும் சிஏஏ எதிர்ப்புப் போராட்டங்களை கண்காணிக்க 6 அதிகாரிகளை டிஜிபி நியமித்துள்ளார்.

  தூத்துக்குடிக்கு நியமித்துள்ள மகேந்திரனின் மேற்பார்வையில்தான் ஸ்டெர்லைட் போராட்டங்களின்போது 14 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவரை நியமித்தன் மூலம் தமிழக அரசு சிஏஏவுக்கு எதிராகப் போராடுபவர்களுக்கு என்ன செய்தியை உணர்த்த விரும்புகிறது?” எனக் கருத்துரைத்துள்ளார்.  Also see:

   
  Published by:Rizwan
  First published: