Home /News /tamil-nadu /

ரூ.12 ஆயிரத்தில் 3 ஐபோன்: ஓ.எல்.எக்ஸ் விளம்பரத்தை பார்த்து பணத்தை பறிகொடுத்த டி.ஜி.பியின் வாகன ஓட்டுநர்

ரூ.12 ஆயிரத்தில் 3 ஐபோன்: ஓ.எல்.எக்ஸ் விளம்பரத்தை பார்த்து பணத்தை பறிகொடுத்த டி.ஜி.பியின் வாகன ஓட்டுநர்

கைது செய்யப்பட்டவர்

கைது செய்யப்பட்டவர்

சென்னையில் குற்றப்புலனாய்வு துறை டிஜிபிக்கு வாகன ஓட்டுனராக பணியாற்றும் நபர் ஓ.எல்.எக்ஸ் விளம்பரத்தைப் பார்த்து பணத்தை ஏமாந்துள்ளார்.

சென்னை மயிலாப்பூர் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் சுந்தர்ராஜா(31). ஆயுதப்படை காவலரான இவர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை டிஜிபிக்கு வாகன ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த 14ஆம் தேதி சுந்தர்ராஜா ஓஎல்எக்ஸ் இணையதளத்தில் செல்போனை வாங்க தேடிய போது, 3 ஐபோன் ரூ.11,700- க்கு விற்பதாக விளம்பரம் ஒன்று வந்ததுள்ளது. இதனை கண்ட சுந்தர்ராஜா விளம்பரம் பதிவிட்ட நபரை தொடர்பு கொண்டு பேசிய போது, பணத்தை அனுப்பியுடன் அடுத்த நாள் செல்போனை அனுப்புவதாக தெரிவித்துள்ளார். இதனை நம்பிய காவலர் சுந்தர்ராஜா அவரது வங்கி கணக்கிற்கு ரூ. 11,700 பணம்  அனுப்பி உள்ளார்.

பின்னர் பல நாட்களாக செல்போன் டெலிவரி செய்யப்படாததால் சுந்தர்ராஜா அந்த நபரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆகி இருந்தது. இதனால் சந்தேகமடைந்த சுந்தர்ராஜா சூளைமேடு காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார்.
புகாரின் பேரில் சூளைமேடு போலீசார் மோசடி உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மோசடி நபர் பேசிய செல்போன் எண்ணை வைத்து தேடிய போது, சூளைமேடு திருவள்ளூவர் புரம் பகுதியில் தங்கியுள்ளார் என்பதை போலீசார் கண்டறிந்தனர்.

அங்கு சென்ற போலீசார் செல்போன் தருவதாக மோசடி செய்த நபரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, அவர், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் அந்நபர் பெயர் காளிதாஸ்(23) என்பதும் தெரியவந்தது.

பட்டதாரியான இளைஞரான இவர் தனியார் ஆன்லைன் நிறுவனத்தில் டீலராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2 மாதத்திற்கு முன்பு சென்னைக்கு வந்த காளிதாஸ் வாடகைக்கு குடோன் ஒன்றை எடுத்து Future Traders என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வந்துள்ளார்.

ஏபிவிபி முன்னாள் தலைவர் டாக்டர் சுப்பையா கைது... முதாட்டி வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த விவகாரத்தில் நடவடிக்கை

இவரிடமிருந்து 100க்கும் மேற்பட்ட எலக்ட்ரானிக் பொருட்கள், ஆவணங்கள் மற்றும் 6 ஏ.டி.எம்.கார்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். டி.ஜி.பி.யின் கார் ஓட்டுநரான காவலர் சுந்தர்ராஜா ஏமாந்தது போல இன்னும் எத்தனை நபர்கள் இவரிடம் ஏமாந்துள்ளனர். எப்படியெல்லாம் காளிதாஸ் ஏமாற்றியுள்ளார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Published by:Karthick S
First published:

Tags: Crime News

அடுத்த செய்தி