ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

விமான அவசர கதவை திறந்த விவகாரம்.. விசாரணை நடத்த உத்தரவு.. அமைச்சர் செய்த ட்வீட்!

விமான அவசர கதவை திறந்த விவகாரம்.. விசாரணை நடத்த உத்தரவு.. அமைச்சர் செய்த ட்வீட்!

செந்தில் பாலாஜி, இண்டிகோ விமானம்

செந்தில் பாலாஜி, இண்டிகோ விமானம்

சுதந்திர காற்றை சுவாசிக்க கதவை திறந்தேன் என சொல்லாமல் இருந்தால் சரி - செந்தில் பாலாஜி ட்வீட்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

விமானத்தின் அவசர கால கதவை திறந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த விமான போக்குரவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி சென்னையில் இருந்து திருச்சி சென்ற விமானத்தில் பயணம் செய்த பயணிகள் 2 பேர், விமானத்தின் அவசர கதவை திறந்ததாகவும், இதனால் விமானம் 3 மணி நேரம் தாமதம் ஆனதாக செய்திகள் வெளியாகி சர்ச்சையானது.

இந்நிலையில், இண்டிகோ விமானத்தில் பயணம் செய்தபோது, விமானத்தின் அவசர கால கதவை திறந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த விமான போக்குரவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் 2 முக்கிய தலைவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, 2 ஆர்வக்கோளாறுகள் விமானத்தின் Emergency கதவை திறந்து விளையாடியது பற்றி தான் முன்னரே கேள்வியெழுப்பி இருந்தாக சுட்டிக்காட்டியுள்ளார். சுதந்திர காற்றை சுவாசிக்க கதவை திறந்தேன் என சொல்லாமல் இருந்தால் சரி என விமர்சித்து பதிவிட்டுள்ளார்.

First published:

Tags: Annamalai, Indigo, Senthil Balaji