Home /News /tamil-nadu /

Aadi Perukku 2021 : தடையை மீறி பக்தர்கள் ஆடிப் பெருக்கு வழிபாடு - கொரோனா பரவும் அபாயம்

Aadi Perukku 2021 : தடையை மீறி பக்தர்கள் ஆடிப் பெருக்கு வழிபாடு - கொரோனா பரவும் அபாயம்

ஆடிப் பெருக்கு வழிபாடு

ஆடிப் பெருக்கு வழிபாடு

காவிரிக் கரையோரங்களில் புதுமண தம்பதிகள் மற்றும் குடும்பத்தினர் முளைப்பாரி, பழங்கள் உள்ளிட்டவைகள் வைத்து தரிசனம் செய்து ஆற்றில் விட்டு வணங்கி சென்றனர்.

    திருத்தணி முருகன் கோவில், சிறுவாபுரி முருகன் கோவில், பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் கொரேனா பலவல் காரணமாக தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், பக்தர்கள் தடையை மீறி வழிபாடு நடத்தி வருகின்றனர்.

    கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை ஒரு சில தளர்வுகள் உடன் தமிழக அரசு ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களான திருத்தணி முருகன் கோவில், சிறுவாபுரி முருகன் கோவில், பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் ஆடி கிருத்திகை சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டது.

    காவடி எடுத்து வந்த பக்தர்களையும் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று திருத்தணி கோவில் நிர்வாகம் அறிவித்திருந்தது. அதேபோன்று பெரியபாளையம் பவானி அம்மன் கோவில், திருவேற்காடு கருமாரியம்மன் கோவில், சிறுவாபுரி முருகன் உள்ளிட்ட முக்கிய கோவில்களுக்கு வரும் பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாடுகளை விதித்தனர்.

    இதனிடையே அரசு விதிமுறைகளையும் மீறி திருத்தணி பெரியபாளையம் ஆண்டார்குப்பம் ஆகிய கோவில்களில் விஐபிகளுக்கு சிறப்பு அனுமதியை வழங்கியிருந்தது. இந்த நிலையில் தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு உத்தரவின் பேரில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவுறுத்தி இருந்த நிலையில் அதனை சிறிதும் பொருட்படுத்தாமல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களான, திருத்தணி பெரியபாளையம் ஆண்டார்குப்பம் முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

    அலகு குத்தி மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் கூட்ட நெரிசலில் சாமி தரிசனம் செய்தனர். இதை அதிகாரிகள் தடுக்க முடியாமல் திணறும் நிலைக்கு தள்ளப்பட்டனர். ஆண்டார்குப்பம், திருத்தணி ஆகிய முருகன் கோவில்களில் காவடி ஏந்தி அலகு குத்தி பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, பறவைக் காவடி என ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக திரண்டு வந்ததால், அப் பகுதிகளில் நோய்த்தொற்றும் அபாயம் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதேபோல, கரூர் மாவட்டத்தில், கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆடிப்பெருக்கு விழாவிற்கு, கோவில்கள் மற்றும் காவிரி, அமராவதி ஆற்றங்கரையில் பொதுமக்கள் கூடுவதற்கு தடைவிதித்து மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் உத்தரவிட்டிருந்தார்.

    Must Read : ஆடிப் பெருக்கு... ஆளின்றி வெறிச்சோடி காணப்படும் திருச்சி காவிரி படித்துறை

    எனினும், காவிரிக் கரையோரங்களில் உள்ள கிராமங்களிலிருந்து தடையை மீறி, மகாதானபுரம், லாலாபேட்டை, குளித்தலை, மாயனூர் காவிரி ஆற்றில், ஆடிப்பெருக்கன்று புதுமண தம்பதிகள் மற்றும் குடும்பத்தினர் முளைப்பாரி, பழங்கள் உள்ளிட்டவைகள் வைத்து தரிசனம் செய்து ஆற்றில் விட்டு வணங்கி சென்றனர். தடையை மீறி ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடினர். மாவட்ட நிர்வாகம் தடை விதித்து இருந்த நிலையிலும் காவல் துறையினர் கண்டுக் கொள்ளவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தமிழகத்தின் பல்வேறு நீர்நிலைகளில் பக்தர்கள் நீராடி, கோயிலிலுக்குச் சென்று வழிபாடு நடத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டிருப்பதால், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நீர்நிலைகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. சில இடங்களில் மக்கள் தடையை மீறி நீராடி வழிபட்டு வருகின்றனர்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Aadi, CoronaVirus

    அடுத்த செய்தி