வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில்
திருவண்ணாமலை,
விழுப்புரம்,
கடலூர்,
கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன
மழை நீடிக்கும் என
வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி நேற்று காலை முதல் திருவண்ணாமலை மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்த நிலையில் வெயிலின் அளவானது 96 டிகிரி பதிவானது. இருந்த போதிலும் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கமானது பகல் நேரங்களில் சுட்டெரித்த போதிலும் கடந்த 2 தினங்களாக மாலை நேரங்களில் கரு மேகங்கள் வானில் சூழ மிதமான மழை பெய்து வந்தது.
இந்நிலையில், நேற்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்த நிலையில், மாலையில் வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ச்சியான நிலைமை நீடித்தது. அதனைத் தொடர்ந்து இரண்டு மணி நேரங்களுக்கு மேலாக திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான தண்டராம்பட்டு, கீழ்பெண்ணாத்தூர், அடி அண்ணாமலை, கீழ் நாச்சிபட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அதேவேளையில் திருவண்ணாமலையில் பௌர்ணமி தினமான நேற்று பல்வேறு மாவட்டம், மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் முடித்து 14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட கிரிவல பாதையில் கிரிவலம் மேற்கொண்டனர்.
Must Read : ஸ்டாலின் அரசியலில் அந்தப்பக்கம் நிற்கிறார்: நான் இந்த பக்கம் நிற்கிறேன் -கமல்ஹாசன் பேச்சு
கிரிவலப்பாதையில் பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டபோது திடீரென மழை கொட்டியது அதைப் பொருட்படுத்தாமல் குடைகளை பிடித்தவாறும், மழையில் நனைந்தவாறும் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலத்தை நனைந்தபடியே சென்றனர். இதேபோல, கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அண்ணாமலையார் திருக்கோவிலுக்குள் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
அ.சதிஷ், திருவண்ணாமலை.
உங்கள் நகரத்திலிருந்து(Tiruvannamalai)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.