சுஜித் பத்திரமாக மீட்கப்பட வடபழனி முருகன் கோவிலில் பக்தர்கள் சிறப்பு பிரார்த்தனை!

சுஜித் பத்திரமாக மீட்கப்பட வடபழனி முருகன் கோவிலில் பக்தர்கள் சிறப்பு பிரார்த்தனை!
ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சிறுவன் சுர்ஜித்
  • News18
  • Last Updated: October 28, 2019, 10:30 AM IST
  • Share this:
வடபழனி முருகன் கோவிலில் பக்தர்கள் பலர் ஆழ்த்துளை கிணற்றில் சிக்கியிருக்கும் குழந்தை சுஜித் மீண்டு வரவேண்டும் என சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

தமிழ் கடவுள் முருகனை விரதமிருந்து வழிபட ஏதுவான கந்த சஷ்டி விழா இன்று தொடங்கியது. தமிழகம் முழுவதும் உள்ள முருகன் திருத்தலங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெருகின்றன.

இன்று தொடங்கிய விழா வரும் 3-ம் தேதி நிறைவு பெருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான் சூரசம்ஹாரம் வரும் 2-ம் தேதி நடைபெறவுள்ளது. சஷ்டியில் 3 நாள் 6 நாள் என பக்தர்கள் விரதமிருந்து முருகனை வழிபடுவர். அப்படி வழிபட்டால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம், வீட்டின் கஷ்டங்கள் நீங்கி இன்பம் செழிக்கும் என்பது மக்களின் நம்பிக்கை.


இந்நிலையில், சென்னை வடபழனி ஆண்டவர் திருக்கோவிலில் சஷ்டியை முன்னிட்டு முருகனுக்கு சந்தனக்காப்பு ராஜ அலங்காரம் செய்யபட்டிருந்தது.

தீபாவளி விடுமுறைக்காக மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்ற நிலையில் இயல்பான கூட்டமே கோவிலில் காணப்பட்டது. இந்த விஷேச நாளில் விரதமிருந்து வேண்டினால் வேண்டியது நடக்கும் என்ற நம்பிக்கையில் பக்தர்கள் பலர் ஆழ்த்துளை கிணற்றில் சிக்கியிருக்கும் குழந்தை சுஜித் மீண்டு வரவேண்டும் என சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

Also see...
First published: October 28, 2019, 10:30 AM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading