கொரோனா கட்டுப்பாட்டுகள் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு வழிபாட்டு தலங்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகள் அமலில் உள்ளன. அதன்படி வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அரசு தடை விதித்துள்ளது.
அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் இன்று மூடப்பட்டன. ஏற்கனவே பொங்கல் பண்டிகை மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு கடந்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் தொடர்ந்து ஐந்து நாட்கள் கோயில்களில் சாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது.
Must Read : சோதனையில் நகை, பணம், பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை - கே.பி.அன்பழகன்
அதன்பிறகு புதன்கிழமை கோயில்கள் திறக்கப்பட்ட நிலையில் இரண்டு நாட்களில் மீண்டும் மூடப்பட்டதால் பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர். இந்நிலையில், வெள்ளிக்கிழமையான இன்று முதல் 3 நாட்களுக்கு வழிபாட்டு தலங்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.