தேவேந்திர குல வேளாளர்கள் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

தேவேந்திர குல வேளாளர்கள் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

மாதிரிப் படம்

ஏழு சாதி பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று அழைக்கும் சட்ட மசோதா இன்று மக்களவையில் நிறைவேறியது.

 • Share this:
  தமிழகத்தில் மாநில பட்டியலினத்தில் உள்ள தேவேந்திர குலத்தான், கடையன், காலாடி, குடும்பன், பள்ளன், பன்னாடி, வாதிரியான் ஆகிய 7 உட்பிரிவுகளை சேர்ந்தவர்களை தேவேந்திர குல வேளாளர் என பொதுப் பெயரிட வேண்டும் என்று அந்த சமூகத்தைச் சேர்ந்த மக்கள், புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன் ஆகியோர் தொடர்ந்து வலியுறுத்திவந்தன. இதுதொடர்பாக, கடந்த 2019 மார்ச் மாதம், ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையில் தமிழக அரசு நியமித்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், 7 உட்பிரிவுகளை சேர்ந்தவர்களை இனி தேவேந்திர குல வேளாளர் என பொதுப் பெயரிட மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2020 டிசம்பரில் தெரிவித்தார்.

  இந்நிலையில், தமிழக அரசின் இந்த பரிந்துரையை ஏற்று, கடந்த பிப்ரவரி 13-ல் பட்டியலினத்தவர் பட்டியலில் மாற்றங்கள் செய்ய அரசியல் சாசன திருத்த மசோதாவை மத்திய சமூக நலத்துறை அமைச்சர் "தாவர்சந்த் கெலாட்" மக்களவையில் அறிமுகப்படுத்தினார். அந்த மசோதா இன்று மக்களவையில் நிறைவேறியது. விரைவில் மாநிலங்களவையிலும் நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின், குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று சட்டமாக்கப்படும்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: