• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ‘தேவேந்திர குல வேளாளர்களும் நானும்.... பாமகவில் ஜான் பாண்டியன்’: ராமதாஸ் பதிவு

‘தேவேந்திர குல வேளாளர்களும் நானும்.... பாமகவில் ஜான் பாண்டியன்’: ராமதாஸ் பதிவு

ராமதாஸ்

ராமதாஸ்

ஜான்பாண்டியன் - பிரிசில்லா பாண்டியன் இணையர் திருமணத்தை நடத்தி வைத்தி வாழ்த்தியதும் நான் தான்.

  • Share this:
    பள்ளர், குடும்பன், காலாடி உள்ளிட்ட 7 சமுதாயங்களை தேவேந்திர குல வேளாளர் என்று அழைப்பதற்கான மசோதா மக்களவையில் தாக்கல் செய்திருப்பது குறித்தும், தேவேந்திர குல வேளாளர் சமுதாய பண்பாடு குறித்தும் சென்னை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி 10 நிமிடங்கள் பேசியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியிருந்த நிலையில், “தேவேந்திரர் குல வேளாளர்களும் நானும், பாட்டாளி மக்கள் கட்சியில் ஜான் பாண்டியன்” என்று குறிப்பிட்டு தனது முகநூல் பக்கத்தில் ஓர் பதிவை வெளியிட்டுள்ளார் ராமதாஸ்.

    அதில் “தேவேந்திரர் குல வேளாளர் சமுதாயத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஜான்பாண்டியனின் அரசியல் பயணம் பாட்டாளி மக்கள் கட்சியில் தான் தொடங்கியது. 1989-ஆம் ஆண்டில் பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கிய போது, அவர் அக்கட்சியின் இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை சிறப்புகள் குறித்து மக்களிடம் முழங்கினார்.

    பாட்டாளி மக்கள் கட்சி 1989-ஆம் ஆண்டு ஜூலை 16-ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில், அந்த ஆண்டு நவம்பர் மாதத்திலேயே, அதாவது கட்சி தொடங்கிய ஐந்தாவது மாதத்தில், நடைபெற்ற மக்களவைத் தேர்தல்தான் பாட்டாளி மக்கள் கட்சியின் முதல் தேர்தல் ஆகும்.

    அந்த தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக ஜான்பாண்டியன் நிறுத்தப்பட்டார். அந்தத் தேர்தலில் அவர் 83,933 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

    1991-ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சி சந்தித்த அதன் முதல் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜான் பாண்டியன் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதியில் பா.ம.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அந்தத் தேர்தலில் அவர் 29,021 (30.24%) வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார். திமுக கூட்டணி வேட்பாளர் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

    ராமதாஸ் - ஜான் பாண்டியன்


    இதற்கெல்லாம் மேலாக ஜான்பாண்டியன் - பிரிசில்லா பாண்டியன் இணையர் திருமணத்தை நடத்தி வைத்தி வாழ்த்தியதும் நான் தான்” இவ்வாறு தனது முகநூலி பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    Must Read: பிரதமர் மோடியை எங்கள் குலசாமியாக தேவேந்திர குல வேளாளர் சமூக மக்கள் வணங்குவர்: இளைஞர் நல சங்க கூட்டமைப்பு நிறுவனர் நெகிழ்ச்சி

     

    டாக்டர் ராமதாஸ், “தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தின் உரிமைகள், பெருமைகள் குறித்து, எவரும் பேசுவதற்கு முன், நான் பேசியதும், வடக்கே வன்னியர்கள், தெற்கே தேவேந்திரர்கள் என்ற முழக்கத்துடன், 1989ல், மதுரை தமுக்கம் திடலில், ஒரு தாய் மக்கள் மாநாட்டை, நான் நடத்தியதும், என் மனதில் நிழலாடுகின்றன” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: