தேவேந்திர குல வேளாளர் என அழைக்கும் அரசாணைக்கு தடை விதிக்கக் கோரிய மனு - மத்திய, மாநில அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம்

வேந்திர குல வேளாளர் என அறிவிக்கப்பட்டு்ளள ஏழு பிரிவுகளையும், வேளாளர் என வரலாற்றில் குறிப்பிடப்படவில்லை என்றும் மனுவில் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  தமிழகத்தில் ஏழு பிரிவினரை தேவேந்திர குல வேளாளர் என அழைக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு தடை விதிக்கக் கோரிய மனுவுக்கு மத்திய – மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  தமிழகத்தில் தேவேந்திர குலத்தான், குடும்பன், பள்ளன், கடையன், காலாடி, பண்ணாடி, வாதிரி ஆகிய உட்பிரிவுகளை சேர்ந்த மக்களை, தேவேந்திர குல வேளாளர் என ஒரே பெயரில் அழைக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது.

  இதன் அடிப்படையில், ஏழு பிரிவினரையும் தேவேந்திர குல வேளாளர் என கருத வேண்டும் என, அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, ஜூன் 1ம் தேதி தமிழக அரசு, அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணைக்கு தடை விதிக்கக் கோரியும், அதை ரத்து செய்யக் கோரியும், உலக வேளாளர் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

  Also Read :  சிம்பு-ஹன்சிகாவின் 'மகா' ஓடிடி-யில் வெளியாக தடை விதிக்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்

  அந்த மனுவில், ஏழு பிரிவினரையும், தேவேந்திர குல வேளாளர் என அழைப்பதற்கு ஆட்சேபம் தெரிவித்து அளித்த மனுவை பரிசீலிக்காமல், தங்கள் ஆட்சேபங்களை கேட்காமல் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

  Also Read : மிரட்டல் வழக்கில் ஜாமின் பெற்ற சாட்டை துரைமுருகன் மற்றொரு வழக்கில் கைது

  தற்போது தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்கப்பட்டு்ளள ஏழு பிரிவுகளையும், வேளாளர் என வரலாற்றில் குறிப்பிடப்படவில்லை என்றும் மனுவில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றம் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, வழக்கு தொடர்பாக மத்திய – மாநில அரசுகள் மூன்று வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: