Home /News /tamil-nadu /

நாணயத்திற்கு இரு பக்கம் போல வளர்ச்சித் திட்டமும், சமூக மேம்பாடும் அவசியம்; அதுவே திராவிட மாடல் - முதல்வர் ஸ்டாலின்

நாணயத்திற்கு இரு பக்கம் போல வளர்ச்சித் திட்டமும், சமூக மேம்பாடும் அவசியம்; அதுவே திராவிட மாடல் - முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

நாணயத்திற்கு இரு பக்கம் போல வளர்ச்சித் திட்டமும், சமுக மேம்பாடும் அவசியம் - அதுவே திராவிட மாடல் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது மாநில மாநாட்டின் ஒரு பகுதியாக சமூக நல்லிணக்க பாதுகாப்பு மாநில உரிமை மீட்பு எழுச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது, கொரோனா தொற்றிலிருந்து மீண்ட நான் சில நாட்கள் வெளியூர் பயணங்களை தவிர்க்க மருத்துவர்கள் பரிந்துறை செய்ததால் என்னால் நேரில் வர இயலவில்லை. ஆனால் இம்மாநாட்டை திருப்பூரில் நடத்துவதாக முத்தரசன் கூறியபோது மகிழ்ந்தேன்.

    நல்லக்கண்ணு அவர்களுக்கு தகைசால் தமிழர் விருது வழங்க அறிவித்திருப்பது மிக மகிழ்ச்சியாக உள்ளது. இயக்கமே வாழ்வென அர்ப்பணித்தவர். ஆகஸ்ட் 15 ஆம் தேதி நான் முறைப்படி வழங்க இருக்கிறேன். இந்த விருது வழங்குவதை எனக்கு கிடைத்த பெருமையாக கருதுகிறேன்.

    காந்தியும், ஜீவாவும் சந்தித்த ஊரில் நினைவு மண்டபம் அமைக்க சிவகங்கை மாவட்டத்தில் மணிமண்டபம் அமைக்க இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் முத்தரசன் வைத்த கோரிக்கையை ஏற்று அப்பகுதியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என இம்மாநாட்டில் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இந்திய நாட்டிற்கு 2 அச்சுறுத்தல் உருவாகியுள்ளது. சமூக நல்லிணக்கம் மற்றும் மாநில உரிமைகளுக்கு எதிரான அனுகுமுறை. அனைவரையும் ஒன்றாக நடத்துங்கள், அனைத்து மொழிகளையும் ஒன்றாக பாருங்கள், அனைத்து மத வழிபாட்டு தலங்களையும் ஒன்றாக மதியுங்கள் என நாம் கேட்பதால் நம்மை தேசவிரோதிகள் என்கிறார்கள். இவை இடதுசாரிகள் மட்டுமல்ல இந்தியாவே கேட்கவேண்டும்.

    முதல்வராக நான் நானாக அமர்ந்துவிடவில்லை, தோழமைக்கட்சிகளால் முதல்வராகியுள்ளேன். நாணயத்திற்கு இரு பக்கம் போல வளர்ச்சிதிட்டமும், சமூக மேம்பாடும் அவசியம். அதுவே திராவிட மாடல். ஆட்சியை குறை கூற இயலாததால் அவதூறு பரப்புகிறார்கள், திராவிட மாடல் தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியா முழுவதிற்குமானது. 75 வது ஆண்டு கொண்டாட்டமாக மட்டுமல்லாது இந்தியாவை செம்மைபடுத்திட உறுதியேற்க வேண்டும்.

    இந்தியாவை காப்பாற்ற இந்திய ஒன்றியத்தில் உள்ள அனைத்து மாநிலங்களையும் காப்பாற்ற வேண்டும், வளர்ச்சியடைய செய்ய வேண்டும். ஜி.எஸ்.டி வரி உயர்த்திவிட்டு மாநில அரசு மீது பழி போடுகிறார் மத்திய நிதியமைச்சர்.

    கல்வியை பள்ளிக்கூடத்தை தாண்டாத வகையில் உரிமையை பறிக்கின்றனர். நாடாளுமன்றத்தில் எதிர்க்குரல் கொடுத்தால் நீக்கம் செய்கிறார்கள், ஒற்றை ஆட்சி முறையை கொண்டு வருகிறார்கள். இது தேர்தல் கூட்டணி அல்ல கொள்கை கூட்டணி, ஒற்றை ஆட்சியை எதிர்த்து ஒரணியில் அணிதிரண்டு எதிர்கொள்வோம் என்று அவர் கூறினார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: CM MK Stalin, Communist Party

    அடுத்த செய்தி