எந்த மொழியை எதிர்க்காவிட்டாலும் எனது மொழியை ஆதரிப்பேன்.. குடியரசு துணைத் தலைவர் பேச்சு
எந்த மொழியை எதிர்க்காவிட்டாலும் எனது மொழியை ஆதரிப்பேன்.. குடியரசு துணைத் தலைவர் பேச்சு
தாய்நாடு, தாய்மொழி வளர்ச்சி என்பது அடிப்படையானது.. குடியரசுதுணைத் தலைவர் பேச்சு
வெளிநாடுகளுக்கு மாநாட்டிற்கு சென்றாலும் பாரம்பரிய உடையிலேயே செல்கிறேன். மத்திய, மாநில அரசுகள் இணைந்து நாட்டின் வளர்ச்சிக்கு உழைக்க வேண்டும் என வெங்கையா நாயுடு தெரிவித்தார்.
மாநிலங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி, மாநிலங்கள் வளர்ச்சி அடைந்தால் நாடும் வளர்ச்சி அடையும் என குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா சாலையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதியின் சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்துவைத்தார். தமிழ்நாடு முதலமைச்சராக ஐந்து முறையும், திமுகவின் தலைவராக ஐம்பது வருடங்களாக பொறுப்புவகித்த மூத்த அரசியல் தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு தமிழ்நாடு அரசு சார்பில் சிலை திறக்கப்பட்டுள்ளது. சென்னையில் முக்கிய பிரதான சாலையான அண்ணா சாலையின் ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தையொட்டி, அமைக்கப்பட்டுள்ள கலைஞர் சிலையை குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு திறந்துவைத்தார்.
அண்ணா அறிவாலயம், திருச்சி, ஈரோடு, தூத்துக்குடியைத் தொடர்ந்து அண்ணா சாலையில் பெரியார் மற்றும் அண்ணா சிலைக்கு அருகிலேயே கலைஞர் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாகும். சுமார் 16 அடி உயரத்திலான முழு உருவ கலைஞரின் வெண்கலச் சிலை, 12 அடி உயரத்திலான பீடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
சிலை திறப்புக்கு பின் கலைவாணர் அரங்கில் கட்சித்தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற சிறப்பு நிகழ்ச்சியில் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசுதுணைத் தலைவர் வெங்கையா நாயுடு, கலைஞர் சிலையை திறந்து வைப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். நாட்டின் மிகச்சிறந்த பேச்சாளர்களில் ஒருவர் கலைஞர் கருணாநிதி. அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைத்தவர் கலைஞர் கருணாநிதி இந்தியாவின் பெருமை மிக்க முதல் அமைச்சர்களில் கலைஞரும் ஒருவர்.
என் இளம் வயதில் கலைஞரின் உரையால் ஈர்க்கப்பட்டு இருக்கிறேன். கருணாநிதி சிறந்த நிர்வாகத்திறமை கொண்டவர். கலைஞர் கைது செய்யப்பட்ட போது ஜனநாயகத்திற்காக வாதாடினேன். கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும் தமது தரப்பு கருத்தை முன்வைப்பதில் கலைஞர் தனித்திறன் கொண்டவர். பன்முகத்தன்மை அர்ப்பணிப்பு, உழைப்பு என பல்வேறு ஆற்றல் நிறைந்தவர் கருணாநிதி அரசியல் பதவி முள்கிரீடம் என்று கூறியவர் கருணாநிதி.
தமிழ் சினிமாவின் புதிய அத்தியாத்தை எழுதியவர் கருணாநிதி. சொல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது. என்ற குறள் கலைஞருக்கு பொருந்தும். தமிழையும் தமிழ் பண்பாட்டையும் வளர்த்தவர் கருணாநிதி. மாற்றுக்கருத்துகள் இருந்தாலும், கருணாநிதியின் செயல்பாடுகளை வியப்போடு பார்த்துள்ளேன்
தாய் மொழியே இதயத்தின் உணர்வுகளை சரியாக வெளிப்படுத்தும். தாய்நாடு, தாய்மொழி வளர்ச்சி என்பது அடிப்படையானது. எந்த மொழியை எதிர்க்காவிட்டாலும் எனது மொழியை ஆதரிப்பேன்.
வெளிநாடுகளுக்கு மாநாட்டிற்கு சென்றாலும் பாரம்பரிய உடையிலேயே செல்கிறேன். மத்திய, மாநில அரசுகள் இணைந்து நாட்டின் வளர்ச்சிக்கு உழைக்க வேண்டும் என்றார்.
Published by:Esakki Raja
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.