ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அவர்கள் திராவிட நாடு என்று சொல்லும் வரை, நாங்கள் கொங்கு நாடு என்று சொல்லிக் கொண்டே இருப்போம் - தேவநாதன் யாதவ்

அவர்கள் திராவிட நாடு என்று சொல்லும் வரை, நாங்கள் கொங்கு நாடு என்று சொல்லிக் கொண்டே இருப்போம் - தேவநாதன் யாதவ்

தேவநாதன் யாதவ்

தேவநாதன் யாதவ்

இல்லாத திராவிட நாடு என்பதை சொல்லிக் கொள்ளும்போது, ஏற்கெனவே இருந்த ‘கொங்கு நாடு’ என்று சொல்வதில் தவறு இல்லை.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  ‘திராவிட நாடு’, ‘ஒன்றிய அரசு’ என்று திமுகவும் அதன் கூட்டணி கட்சியினரும் சொல்லும் வரை ‘கொங்கு நாடு’ என்று நாங்கள் சொல்லிக் கொண்டே இருப்போம் என்று யாதவ மகாசபையின் தேசியத் தலைவரும், இந்திய கல்வி மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவருமான தேவநாதன் யாதவ் கூறியுள்ளார்.

  தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு தேவநாதன் யாதவ் அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில், ‘கொங்கு நாடு’ என்ற கோரிக்கை அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு இல்லை. ஆனால், ‘திராவிடநாடு’, ‘ஒன்றிய அரசு’, தனித் தமிழ்நாடு என்றெல்லாம் பிரிவினை உள்நோக்கத்துடன் பேசி வருபவர்களுக்கு பதிலடியாக ‘கொங்கு நாடு’ கோரிக்கை இருக்கும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  கொங்கு நாடு, சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, நாஞ்சில் நாடு என்பதெல்லாம் இந்தியாவில் இருந்தவை. இல்லாத திராவிட நாடு என்பதை சொல்லிக் கொள்ளும்போது, ஏற்கெனவே இருந்த ‘கொங்கு நாடு’ என்று சொல்வதில் தவறு இல்லை. அவர்கள் ‘திராவிட நாடு’ என்று சொல்லும் வரை, நாங்கள் ‘கொங்கு நாடு’ என்று சொல்லிக் கொண்டே இருப்போம்.

  ‘ஒன்றிய அரசு’ என்று சொல்வதன் நோக்கம் தவறானது. திமுக கேட்கும்மாநில சுயாட்சி என்பதன் நோக்கமும் வேறு. திமுக நிறுவனர் அண்ணாவே, சாத்தியமற்றது என்று கைவிட்டதை இவர்கள் திரும்ப ஆரம்பிக்கிறார்கள். நிர்வாக வசதிக்காக மாநில அரசுகள் பெரிய மாவட்டங்களை பிரிக்கின்றன. பெரிய மாநிலங்கள் பிரிக்கப்படுவதும் அதுபோன்றதுதான்.

  புதிய மாநிலங்கள் உருவாக்கப்படுவது பிரிவினை வாதம் என்றால் தமிழ்நாடு என்ற மாநிலமே உருவாகியிருக்க முடியாது. சென்னை மாகாணத்தில் இருந்து பிரிந்ததுதானே தமிழ்நாடு. திமுக அங்கம் வகித்த வாஜ்பாய் ஆட்சியில் சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், உத்தராகண்ட் ஆகியபுதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. கடைசியாக ஆந்திராவில் இருந்து தெலங்கானா உருவானது.

  மக்கள்தொகை அதிகமானால் புதிய மாநிலங்களை உருவாக்க வேண்டிய அவசியம் உருவாகிறது. தமிழகத்தின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை இப்போதே 5 கோடியை தாண்டிவிட்டது. இது 10 கோடியாக அதிகரித்தால், வருங்காலத்தில் தமிழகத்தை இரு மாநிலங்களாக பிரிக்கும் சூழல் உருவாகலாம். மக்களை திசை திருப்புவது திமுகதான், நாங்கள் இல்லை என்று தேவநாதன் யாதவ் கூறியுள்ளார்.

  Must Read : ஜெயலலிதா சமாதிக்குச் செல்லும் சசிகலா... அனல் பறக்கும் அடுத்த மூவ்!

  இந்நிலையில், கொங்கு நாடு முன்னேற்ற கழகம், கொங்கு நாடு என்பது பிரிவினை அல்ல அது வளர்ச்சியின் அடையாளம் என்றும் கூறியுள்ளது. மத்திய பிரதேசம், பீகார், உத்தர பிரதேசம் போன்றவை பிரித்து புது மாநிலங்கள் ஏற்படுத்தப்பட்டன. தனி மாநிலமாக அறிவிக்க அனைத்து தகுதிகளும் உள்ளது. உடனடியாக இதை செயல்படுத்த வேண்டும். இங்குள்ள, 11 மாவட்டங்களில் 10 லோக்சபா, 61 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கோவையை தலைநகராக கொண்டு தனி மாநிலம் அமைக்க வேண்டும். தொழில் வளர்ச்சி பெருகும் என அக்கட்சியின் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Suresh V
  First published:

  Tags: DMK Alliance, Dravidam, Kongu Nadu